ஸ்டார்பக்ஸ் காஃபி நிறுவனமும், டாட்டா குளோபல் பெவரேஜஸ் லிமிடட் நிறுவனமும் 50:50 என்ற அளவில் இணைந்து டாட்டா ஸ்டார்பக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியிருக்கின்றன. டாட்டா ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் முதல் கிளை கடந்த புதன் கிழமையன்று, டெல்லியில் உள்ள கூர்கானில் என்சிஆர் பகுதியில் தொடங்கப்பட்டது.

புதிய கிளையைத் தொடங்கி வைத்து பேசிய டாட்டா ஸ்டார்பக்ஸ் லிமிட்டட்டின் தலைமை இயக்குனர் அவனி தேவா கூறும் போது, வாடிக்கையாளர்களுக்கு வசதியான இடங்களில் எங்கள் கிளைகளை நிறுவி, அவர்களுக்கு ஸ்டார்பக்சின் அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம் என்று தெரிவித்திருக்கிறார்.
கூர்கானில் உள்ள ஆம்பியன்ஸ் மாலில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த புதிய கிளை மூலம் ஸ்டார்பக்ஸ் தனது வியாபாரத்த மேலும் விரிவு செய்திருக்கிறது. மேலும் இந்த ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 50 கிளைகளைத் தொடங்க அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதற்காக ரூ.400 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications