1991ஆம் ஆண்டு நெருக்கடியை நோக்கி இந்திய பொருளாதாரம்

1991ஆம் ஆண்டு நெருக்கடியை நோக்கி இந்திய பொருளாதாரம்
1991 ஆம் ஆண்டு கடும் நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டு அதை வளர்ச்சி பாதைக்கு நடத்திச் சென்ற பெருமை அன்றைய நிதியமைச்சரும், இந்நாள் இந்திய பிரதமருமான மன்மோகன் சிங் மற்றும் அவருடைய குழுவையே சேரும். ஆனால் அவ்வாறு மீண்டு வந்த பொருளாதாரத்தை அவரே 1991 ஆம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடிக்கு மீண்டும் தள்ளிவிடக்கூடாது என்று பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.

(A few smart tips for financial freedom)

எனினும் தற்போது இந்தியாவில் இருக்கும் கரண்ட் அக்கௌண்ட் டெஃபிசிட் 1991 ஆம் ஆண்டை விட நன்றாகவே இருக்கிறது என்று பலரும் தெரிவிக்கின்றனர்.

எனினும் 1991ல் வெளிநாட்டுக் கடன் நெருக்கடிக்கு இந்தியா தள்ளப்பட்டது போல தற்போதும் அத்தகைய நிலையை நோக்கி இந்தியா தள்ளப்பட்டிருப்பதாக ஒருசில ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்த நிதியாண்டில் மட்டும் இந்தியா தனது மொத்த வெளிநாட்டு கடனான 390.04 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து, 172.35 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த தொகை இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடனில் 44 சதவீதம் ஆகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவின் கரண்ட் அக்கௌண்ட் டெஃபிசிட் மிகவும் குறைந்த உள்ளது. ஏனெனில் வெளிநாடுகளில் இருந்து அதிகமான பணம் இந்திய பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்யப்பட்டன. அவ்வாறு இந்திய பங்கு மற்றும் கடன் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்ட பணத்தின் பெரும் பகுதியினை வெளிநாடுகளால் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளன. அதனால் இந்திய ரூபாயின் மதிப்பில் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளன.

இந்த நிலை மேலும் தொடருமானால், அதாவது பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுக்கும் அன்னிய நிறுவனங்களின் முதலீடுகள் இன்னும் அதிகமாக திரும்பப் பெறப்பட்டால், அவை மேலும் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுனர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த 9 வருடங்களாக அதிகாரத்தில் இருக்கும் ஐக்கிய முன்னனி அரசு நேரடி அன்னிய முதலீடுகளில் உள்ள கெடுபிடிகளைத் தளர்த்தி, இந்தியாவில் அமெரிக்க டாலர்களின் வருகையை அதிகரித்திருக்கலாம். ஆனால் இந்த அரசு நேரடி அன்னிய முதலீட்டை ஊக்கப்படுத்துவதிலும் மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதிலும் அதிக அக்கறை காட்டவில்லை. ஐக்கிய முன்னனியிலிருந்து மம்தா பானர்ஜி விலகிய பிறகுதான் ஒரு சில சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றன என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக இந்திய ரிசரவ் வங்கி மற்றும் செபி ஆகிய அமைப்புகள், இந்திய ரூபாயின் மதிப்பை மீட்டெடுக்கும் முயற்சியில் அரசுக்கு உதவி செய்து வருகின்றன. ஆனால் இந்த உதவிகள் இந்தியாவின் கரண்ட் அக்கௌண்ட் டெஃபிசிட்டை சரி செய்துவிடாது. அதே வேளையில் இந்திய நிதியமைச்சர் அவர்கள் இது சம்பந்தமாக மக்களை அமைதிப்படுத்தும் வகையில் தொலைக்காட்சியில் தோன்றி அரசு எடுத்துவரும் மீட்பு நடவடிக்கைகளைப் பற்றி விளக்கி வருகிறார்.

இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சியான ஜிடிபி கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு குறைவாக இருக்கிறது. ஜிடிபியை வளர்ச்சி பாதைக்கு இட்டுச் செல்ல இந்திய ரிசர்வ் வங்கியின் உதவியை இந்திய அரசு நாடியிருக்கிறது. அதாவது வட்டி விகிதத்தைக் குறைத்து வளர்ச்சி விகிதத்தை ஊக்கப்படுத்த ரிசரவ் வங்கியை மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைப்பதாக தெரியவில்லை. ஏனெனில் இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு ஏற்பட்டிருப்பதாலும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகம் எண்ணெய் இறக்குமதி செய்வதாலும், பணவீக்கம் அதிகரித்திருக்கிறது.

தற்போது இந்திய பொருளாதாரத்திற்கு இருக்கும் மிக முக்கிய பிரச்சினை என்னவென்றால், யுஎஸ் ஃபெடரல் ரிசர்வ் அமைப்பு, உலகம் முழுவதும் அமெரிக்கா செய்திருக்கும் முதலீட்டை திரும்பப் பெறுவதற்கு முடிவு செய்திருக்கிறது. அவ்வாறு நடந்தால், அமெரிக்கா இந்திய சந்தைகளில் செய்திருக்கும் முதலீடுகளைத் திரும்பப் பெற்றுவிடும். அதனால் இந்தியாவின் ரூபாயின் மதிப்பு மேலும் சரிவுக்கு செல்லும்.

இந்த நேரத்தில் உலக ரேட்டிங் எஜென்சியான எஸ்&பி இந்திய ரூபாய்க்கு குறைந்த மதிப்பை அளித்துவிடக்கூடாது என்று அனைவரும் பிரார்த்தனை செய்வது நல்லது. அவ்வாறு எஸ்&பி குறைந்த ரேட்டிங்கை வழங்கினால் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவை நோக்கிச் செல்லும்.

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன், கரன்ட் அக்கௌண்ட் டெஃபிசிட்டை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக சரிந்து கொண்டிருக்கிறது.

அதிகரிக்கப்பட்ட வட்டி விகிதங்கள் மற்றும் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத பொருளாதார வளர்ச்சிக் குறைவு ஆகியவை இந்திய பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய நெருக்கடிகளை கொடுக்கின்றன. நாம் 1991 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியை இன்னும் சந்திக்காமல் இருக்கலாம். எனினும் தற்போது இந்திய பொருளாதாரம் ஒரு ஆரோக்யமான நிலையில் இல்லை என்பதே உண்மை.

1991 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியை தற்போது இருக்கும் பொருளாதார நிலையோடு ஒப்பிட்டுப்பார்த்தால் வலிமையான ஃபோரெக்ஸ் ரிசர்வ்கள் (forex reserves) மட்டுமே நமது நம்பிக்கையாக இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+