பங்கு சந்தையில் 40,000 கோடி முதலீடு செய்ய திட்டம்: எல்.ஐ. சி

பங்கு சந்தையில் 40,000 கோடி முதலீடு செய்ய திட்டம்: எல்.ஐ. சி
இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டாளரான, எல்ஐசி நிறுவனம், இந்த நிதி ஆண்டில் சுமார் ரூ 40,000 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த முதலீடானது கடந்த நிதி ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட சுமார் ஒன்றில் மூன்று பங்கு (தோராயரமாக 33 சதவீதம்) அதிகமாகும். அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறி வரும் இந்தத் தருணத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு பலருடைய கவனத்தை கவர்ந்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பானது தொடர்ந்து சரிந்து வரும் இந்தியப் பங்குச் சந்தையின் சரிவை நிலை நிறுத்த உதவும் என எதிர்பார்க்கப் படுகிறது.

"நாம் சந்தையின் போக்கிற்கு எதிராக நடை போடும் வீரர்கள், மேலும் கெட்ட நேரம் என்பது எப்பொழுதும் கிடையாது. பொதுவான முதலீட்டாளரின் பார்வையில், பங்குச் சந்தைகளின் நிலைமை கடந்த மாதத்தில் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. ஆனால் இது எங்களுக்கு பங்கு வாங்குவதற்கான நல்ல வாய்ப்பாக தெரிகிறது. இந்த நிதி ஆண்டில், பங்கு சந்தைகளில் ரூ 40,000 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம், " என எல்.ஐ. சி யின் தலைவர் எஸ்.கே. ராய் தெரிவித்தார். அவர் எல்.ஐ.சி நிறுவனத்தில் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் பங்கேற்ற முதல் ஊடக பேட்டி அனைவராலும் உற்று கவனிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் எக்கனாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எல் ஐ சி நிறுவனம் 2013-14 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் ரூ 14,000 கோடி வரை ஏற்கனவே பங்குகளில் முதலீடு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு முழுவதும் இந்த நிறுவனத்தால் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்ட ரூ 30,000 கோடியில் கிட்டத்தட்ட சரி பாதி ஆகும்.

மே மாத மத்தியில் இருந்து சென்செக்ஸ் சுமார் 4.7 சதவீத அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது. அதற்கு முந்தைய மாதங்களில் மிகக் குறைந்த அளவில் இருந்து சுமார் 4.2 சதவீதம் சென்செக்ஸ் மீண்டெழுந்த போதிலும் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த ஐந்து வாரங்களில் சுமார் 1.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ள போதிலும் நடப்பு நிதியாண்டில் ஒட்டு மொத்த நிகர முதலீடு நேர்மறையாகவே உள்ளது.

எல்.ஐ. சி யின் மூத்த நிர்வாகியான திரு ராய், எல் ஐ சி நிறுவனம் நீண்ட கால கண்ணோட்டத்தில் பங்குச் சந்தை முதலீட்டை பார்க்கிறது. மேலும் இந்த நிறுவனம் இந்திய பொருளாதாரத்தை பற்றி ஒரு நேர்மறையான எண்ணத்துடன் இருக்கிறது." என்றார். இரண்டு அல்லது ஆறு மாதங்களில் நடக்கும் எதுவும் பாதிக்காது.

எல்.ஐ. சி நிறுவனம் பல அரசுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையின் பொழுது, அந்த நிறுவங்களின் பங்கு விற்பனையை முன்னெடுக்கும் பாதுகாவலராக செயல்படுவதாக பல இடங்களில் இருந்தும் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த வருடத்தில் ஓஎன்ஜிசி பங்குகள் ஏல விவகாரத்தில் கடைசி நேரத்தில் தலையிட்டு ஓஎன்ஜிசி பிஎஸ்இ - 0.97 சதவீத பங்குகளை எல்.ஐ.சி வாங்கிய விவகாரம் சர்ச்சைக்கு உள்ளானது.

மேலும் எல்.ஐ. சி நிறுவனம் எம்எம்டிசி பிஎஸ்சி -4.95% மற்றும் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் பங்குகளை விலக்கிக் கொள்ளும் திட்டத்தில் பங்கேற்று அதிக அளவு முதலீடு செய்துள்ளது.

எனினும் திரு ராய் இந்த விமர்சனத்தை மறுத்துள்ளார். "நான் பங்கு விற்பனையை முன்னெடுக்கும் பாதுகாவலர்', என்கிற பதம் சரியானதில்லை. இந்த நிறுவனம் முதலீடு சம்பந்தமாக பல்வேறு மட்டங்களில் தீவிரமாக விவாதித்து, பங்குகளை வாங்குவது பற்றிய முடிவை மேற்கொள்ளும்." என்று அவர் கூறினார்.

"நான் எல்.ஐ. சி நிறுவனம் முதலீடு செய்துள்ள நிறுவனத்தின் நிர்வாகத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கு இருக்க வேண்டும் என்பதை ஒத்துக் கொள்கின்றேன். ஆனால், என்னுடைய முதன்மையான பணி, நாங்கள் முதலீடு செய்துள்ள நிறுவனத்தில் இருந்து கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதை உறுதி செய்வது மட்டுமே" என்று அவர் கூறினார். மேலும் எல்.ஐ.சி, முதலீடு செய்துள்ள நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் அதிக முன்னுரிமை அல்லது வேறு ஏதேனும் முக்கிய பொறுப்புகள் தேவைப்பட்டால், நடைமுறைப் படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

எல்.ஐ.சி நிறுவனம் காப்பீட்டு துறை நெறிமுறையாளரான காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்துடன், முதலீட்டு விதிமுறைகளை தளர்த்துவது சம்பந்தமாக விவாதங்களில் உள்ளது. தற்போதைய வழிமுறைகளின் படி எல்.ஐ.சியால் ஒரு நிறுவனத்தின் மொத்த கடன் பத்திரங்களின் மதிப்பில் சுமார் 15 சதவீதத்திற்கும் அதிகமாக முதலீடு செய்ய முடியாது.

"நாம் ஒரு நிறுவனத்தின் கடன் பத்திர முதலீடு வகைகளில் தற்பொழுது உள்ள நடைமுறைகளை விட அதிகமாக முதலீடு செய்ய விரும்புகின்றோம். நாங்கள் 25% முதல் 30% சதவீத அளவிற்கு முதலீடு உச்ச வரம்பை உயர்த்த முயன்று வருகின்றோம். அவ்வாறு உயர்த்தப்பட்டால் தற்போதைய பணியானது மேலும் எளிதாக்கும் என நம்புகின்றேன்." என திரு ராய் கூறினார்.

"எல்.ஐ.சி. நிறுவனத்தின் செயல்படாத சொத்துக்களின் அளவு ஒரு திருப்பிகரமான நிலையில் உள்ளது. செயல்படாத சொத்துக்களின் அளவை 1 சதவீதத்திற்கும் கீழே கொண்டு வர விரும்புகின்றோம். ஆனால், தற்பொழுதைய நிலையில் எங்களுடைய நிகர என்பிஏயின் மதிப்பு சுமார் 1.18 சதவீதமாக உள்ளது. இதை 1 சதவீதத்திற்கும் கீழே கொண்டு வந்து நிலை நிறுத்த விரும்புகின்றோம்" என்று எல்.ஐ. சி தலைவர் ராய் கூறினார்.

வங்கி உரிமம் கோரி எல்.ஐ. சி வீட்டு வசதி வாரியம் விண்ணப்பம் அனுப்பியுள்ள பிரச்சனையில், திரு ராய், எல்.ஐ. சி வீட்டு வசதி வாரியம் என்பது எல்.ஐ.சி யின் துணை நிறுவனமாக இருந்த போதிலும் அது ஒரு குழுவால் நிர்வகிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+