இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைக்க அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைக்க அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு!!
இந்தியாவின் பொருளாதார கொள்கை வரைவுகள் எல்லாம் வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. எனவே அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என்று இந்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அமெரிக்காவில் நடந்த அமெரிக்க தொழில் அதிபர்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் ஆகியோரோடு நடந்த கூட்டத்தில் இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.

அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சிலின், ஆண்டு இறுதி தலைமைத்துவ கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான்கு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்காவிற்கு சென்ற சிதம்பரம், அமெரிக்க கார்ப்பரேட் துறை தலைவர்களிடம், இந்தியாவில் அவர்களது உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

 

மேலும் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் பரஸ்பர புரிதல் மூலம் உற்பத்தி துறையில் இந்தியப் பொருளாதாரம் ஒரு பெரிய சக்தியாக உருவாகும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

 

மைக்ரோசாப்ட், லாக்ஹீட் மார்ட்டின், போயின் மற்றும் லீஸ் ஃபைனான்ஸ் கார்ப்பரேசன் (ஐஎல்எஃப்சி) போன்ற நிறுவனங்களின் தலைவர்கள், சமீபத்தில் அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்திருக்கும் பரிமாற்ற கட்டணம் மற்றும் காம்பரகன்சிவ் இமிகிரேசன் பில் போன்றவற்றினால் ஏற்படும் விளைவுகள் பற்றி தங்களது கருத்துக்களை வெளியிட்டனர்.

பரிமாற்ற கட்டணம் சார்பாக ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளை சமாளிக்க நிறுவனங்கள் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியவையாக இருக்கின்றன. பல நிறுவனங்களில் நேரடி அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பது சம்பந்தமாக அரவிந்த மயராம் கமிட்டி அளித்திருக்கும் பரிந்துரைகளை சிதம்பரம் பரிசீலனை செய்திருக்கிறார். மேலும் அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் வேலை செய்வோருக்கு வழங்கப்படும் விசா சம்பந்தமான அமெரிக்கா வெளியிட்டிருக்கும் காம்ப்ரகன்சிவ் இமிக்ரேசன் ரிஃபார்ம் விதிமுறையில் இருக்கும் முக்கிய சிறப்பம்சங்களை சிதம்பரம் கோடிட்டுக் காட்டினார்.

அமெரிக்காவில் நடக்க இருக்கும் அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சில் தலைமைத்துவ கூட்டத்தில் தனது முக்கிய உரையை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்க நிதியமைச்சாரன ஜாக் லீயு என்பவரையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் கொள்கை வரைவுகளில் அமெரிக்கர்கள் அதிருப்தி தெரிவித்திருக்கும் இந்த நிலையில் சிதம்பரம் வாஷிங்டனிற்கு சென்றிருக்கிறார். கடந்த சில வாரங்களாக 250க்கும் மேற்பட்ட அமெரிக்க சட்டவல்லுனர்கள், அமெரிக்க நிறுவனங்களுக்கான இந்திய அரசின் கொள்கை வரைவுகள் ஒருதலைப்பட்சமாக இருக்கிறது என்று ஸ்டேட் செகரட்டரியான ஜான் கேரிக்கும், அமெரிக்க அதிபரான பாரக் ஒபாமாவிற்கும் தங்கள் கருத்துக்களை எழுதியிருக்கின்றனர்.

இந்திய பொருளாதார கொள்கை வரைவுகளில் ஒபாமாவின் நிர்வாகம் தலையிட வேண்டும் என்று அமெரிக்க சட்ட வல்லுனர்கள் மற்றும் அமெரிக்க கார்ப்பரேட் துறை பிரதிநிதிகள் ஆகியோர் இரண்டு அமெரிக்க காங்கிரஸ் கமிட்டிகளில் தெரிவித்திருக்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Set up manufacturing bases in India, Chidambaram urges U.S. firms

The Union Finance Minister P Chidambaram has defended Indian policies as growth oriented as he invited American companies to establish manufacturing plants in India during his meetings with the industry leaders and lawmakers of the United States.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X