சமீபத்தில் நேரடி அன்னிய முதலீடு சம்பந்தமாக, பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் தலைமையில் ஒரு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் முடிவில் நேரடி அன்னிய முதலீட்டு அளவைத் தளர்த்துவதற்கான பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
தொலைத் தொடர்புத் தொடர்பு துறையில்
தொலைத் தொடர்புத் தொடர்பு துறையில் இதுவரை 74 சதவீதம் மட்டுமே நேரடி அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 100 சதவீதம் வரை அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதில் 49 சதவீத நேரடி அன்னிய முதலீடு ஆட்டோமேட்டிக் ரூட் மூலமும் மீதி எஃப்ஐபிபி (FIPP) ரூட் மூலமும் அனுமதிக்கப்படும்.
விமான போக்குவரத்து துறை
விமான போக்குவரத்து துறை உள்ள நேரடி அன்னிய முதலீட்டுக்கான அளவில் மாற்றமில்லை. அதாவது ஏற்கனவே இருந்த 49 சதவீதமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறை
பாதுகாப்புத் துறையில் உள்ள நேரடி அன்னிய முதலீட்டிற்கும் ஏற்கனவே இருந்த 26 சதவீதமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எனினும் சிசிஎஸ் வழங்கும் ஸ்டேட்-ஆஃப்-த-ஆர்ட் டெக்னாலஜியில் அதிகமான நேரடி அன்னிய முதலீடு வந்தால் அதை பரிசீலனை செய்யலாம்.
சில்லறை வணிகம்
தனிப்பட்ட ப்ராண்ட் சில்லறை வணிகத்தில் 100 சதவீத நேரடி அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதில் 49 சதவீதம் ஆட்டோமேட்டிக் மூலமும், 49 முதல் 100 சதவீதம் வரை எஃப்ஐபிபி மூலமும் நேரடி அன்னிய முதலீடு பெறலாம்.
இன்சூரன்ஸ் துறையில்
இன்சூரன்ஸ் துறையில் இதுவரை இருந்து 26 சதவீத நேரடி அன்னிய முதலீடு தற்போது 49 சதவீத அளவிற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. எனினும் அதற்கான ஒப்புதலை இன்னும் நாடாளுமன்றத்திலிருந்து பெறவில்லை.
பெட்ரோல் ரிஃபைன் துறையில்
பெட்ரோல் ரிஃபைன் செய்யும் துறையில் 49 சதவீத நேரடி அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதை ஆட்டோமேட்டிக்கு ரூட் மூலம் பெறலாம். இதற்கு முன்பு எஃப்ஐபிபி ரூட் மூலம் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
மின் பரிமாற்றத் துறை
மின் பரிமாற்றத் துறையில் 49 சதவீத நேரடி அன்னிய முதலீடு ஆட்டோமேட்டிக் ரூட் மூலம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு எஃப்ஐபிபி ரூட் மூலம் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
சொத்துகளை மறுசீரமைக்கும் நிறுவனங்கள்
சொத்துக்களை மறுசீரமைப்பு செய்யும் நிறுவனங்களுக்கு ஏற்கனவே இருந்து 74 சதவீத நேரடி அன்னிய முதலீடு தற்போது 100 சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டது. இதில் 49 சதவீதம் ஆட்டோமேட்டிக் ரூட் மூலம் அனுமதிக்கப்படுகிறது.
ஐடி துறை
ஐடி துறையில் 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதத்திற்கு நேரடி அன்னிய முதலீடு உயர்த்தப்பட்டுள்ளது.
பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்தகத்தில் 49 சதவீத நேரடி அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் ஆட்டோமேட்டிக் ரூட் மூலமே முதலீடு செய்ய முடியும்.
கூரியர் துறை
கூரியர் துறையில் ஆட்டோமேட்டிக் ரூட் மூலம் 100 சதவீத நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
தேயிலைத் தோட்டத் துறை
தேயிலைத் தோட்டத் துறையில் 49 சதவீதம் ஆட்டோமேட்டிக் ரூட் மூலமும், 49 முதல் 100 சதவீதம் வரை எஃப்ஐபிபி ரூட் மூலம் நேரடி அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
முடிவு எடுக்கப்படாத துறைகள்
விமான நிலையங்கள், தொடர்பு ஊடகங்கள், மருத்துவ துறை, மல்டி ப்ராண்ட் சில்லறை வணிகத் துறை போன்றவற்றிற்கான நேரடி அன்னிய முதலீடு பற்றி எந்தவித முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications