கடந்த ஆண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது காலாண்டு நிதியறிக்கையை வெளியிடும் போது, அந்த நிறுவனத்தின் பங்குகளில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த கட்டுரையில் கடந்த 5 காலாண்டுகளில் இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகளில் ஏற்பட்ட மாற்றங்களைப் பார்க்கலாம். எனினும் அந்த நிறுவனத்தின் பங்குகளில் ஏற்றத்தைவிட சரிவே அதிகமாக காணப்படுகிறது.
ஜூலை 12, 2013
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் கௌரவமான லாபத்தை ஈட்டிய இன்ஃபோசிஸ், தனது காலாண்டு நிதியறிக்கையை வெளியிட்ட பிறகு அந்த நிறுவனத்தின் பங்குகள் 11 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது. அதன் மூலம் தேசிய பங்குச் சந்தையில் அதன் பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.2804 கோடி அளவிற்கு உயர்ந்து இருக்கிறது.
ஏப்ரல் 12, 2013
2013 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிதி நடவடிக்கைகள் மிகவும் மோசமாக இருந்ததால் அதன் பங்குகளின் மதிப்பு 21 சதவீதம் அளவிற்கு கடும் வீழ்ச்சி அடைந்தது. அந்த நிறுவனத்தின் பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.2295 கோடி அளவிற்கு மிகவும் குறைந்தது.
ஜனவரி 11, 2013
இந்த காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 16.79 சதவீத அளவிற்கு வளர்ச்சி அடைந்தது. 2013 ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிதச் செயல்பாடுகள் நன்றாக இருந்ததால், 16.79 சதவீத வளர்ச்சியை இன்ஃபோசிஸ் பெற்றது.
அக்டோபர் 12, 2012
இந்த காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகளில் 5.44 சதவீதம் சரிவு ஏற்பட்டது. 2012 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிதிச் செயல்பாடுகள் சரியாக இல்லாததால், அதன் பங்குகளின் மதிப்பு 5.44 சதவீதம் குறைந்து ரூ.2395 கோடி அளவிற்கு குறைந்தது.
ஜூலை 12, 2012
இந்த காலாண்டிலும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் சரிவையே சந்தித்தன. அதாவது 2013 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிதிச் செயல்பாடுகள் சரியக இல்லாததால், அந்த நிறுவனத்தின் பங்குகளில் 8.36 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டு, அந்த நிறுவனத்தின் பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.2264 கோடி அளவிற்கு குறைந்தது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications