இந்தியத் தகவல்தொழில்நுட்பத் துறையினரின் கனவு நிறுவனமாகவும், பங்கு சந்தை முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனமாகவும் விளங்கிய சத்யம், ஊழல், மற்றும் முறைகேடு சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமாகி இருந்த நிலையில், பல சிக்கல்களுக்கும், குழப்பங்களுக்கும் நடுவில் சத்யம் நிறுவனத்தை முழுமையாக டெக் மகேந்திரா நிறுவனம் முறையாக இணைக்கப்பட்டுவிட்டது என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சத்யம் நிறுவனத்தின் வரலாற்றில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. அந்த நிறுவனத்தின் ஊழல்களை வெளிப்பட்ட ஒரு வாரத்திற்குள், அந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 95 சதவீத சரிவை சந்தித்து வெறும் காகிதமாகிப் போனது. அந்த நிலையில் இருந்து அந்த நிறுவனத்தின் மதிப்பு தற்பொழுது சுமார் 10 மடங்கு அதிகரித்துள்ளது.

இன்றும் அந்த மோசடியின் தாக்கத்தை அனுபவித்து வரும் சத்யம் நிறுவனத்தை அதனுடைய காப்பாளரான டெக் மகேந்திரா நிறுவனம், இந்திய தொழில் துறை நிறுவனங்களின் பட்டியலில் நிலைநிருத்தியுள்ளதாக தொழில் முறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
1995 ல் இந்தியப் பங்கு சந்தையில் பட்டியலிடப் பட்ட பின்னர், சத்யம் நாட்டின் முதல் ஐந்து ஐடி நிறுவனங்களில் ஒன்று என்கிற பெருமையைப் பெற்றது. மேலும் 2008 ம் ஆண்டில் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் ரூ 250 என்கிற அளவில் வர்த்தகமாகியது.
2009 ம் ஆண்டு வாக்கில் வெளிவந்த சத்யம் (உண்மை என்பதற்கான சமஸ்கிருத சொல்) நிறுவனத்தின் மற்றொரு முகம் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த நிறுவனத்தின் நிறுவனரான திரு ராமலிங்க ராஜுவினால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட இந்தியாவின் மிகப் பெரிய நிறுவன ஊழலானது அந்த நிறுவனத்தின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியது. அதன் காரணமாக அந்த நிறுவனப் பங்குகள் ரூ 11.50 என்கிற அளவில் வர்த்தமமாகத் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு விரைவான மறுமலர்ச்சி நடவடிக்கைகளின் காரணமாக, சத்யம் நிறுவனம் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ஏலத்தின் மூலம் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் கைகளுக்கு மாறியது. அந்த நிறுவனத்தின் பெயரும் மஹிந்திரா சத்யம் என மாற்றப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெக் மகேந்திரா நிறுவனம், சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனப் பங்குதாரர்களுக்கான பங்கு ஒதுக்கீட்டை முடித்து விட்டதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் பங்குகள் 129 மில்லியனில் இருந்து 232 மில்லியனாக அதிகரித்துள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் குடையின் கீழ் பல்வேறு மாற்றங்கள் அந்த நிறுவனத்தில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இறுதியாக மஹிந்திரா குழுமம் இந்த இரு ஐடி நிறுவனங்களையும் ஒன்றாக ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளது. ஆகவே இனி மஹிந்திரா சத்யம் நிறுவனப் பங்குகள் இனி பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகாது.
மஹிந்திரா சத்யம் நிறுவனப் பங்குகள் கடைசியாக ரூ 120 என்கிற அளவில் விற்பனையாகின்றன. டெக் மஹிந்திரா நிறுவனப் பங்குகளின் தற்பொழுது உள்ள விலையான ரூ 1,120 கணக்கில் கொள்ளும் பொழுது சத்யம் கம்யூட்டர் நிறுவனப் பங்குகளின் தற்போதைய மதிப்பு ரூ 130 ஆகும் (இணைப்பு விகிதத்தின் படி).
இணைப்பு விகிதத்தின் படி, சத்யம் முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு 17 பங்குகளுக்கும் இரண்டு டெக் மகேந்திரா பங்குகள் வழங்கப்படும்.
தொழில்முறை நிபுணர்கள், சத்யத்தின் பெயரை கைவிடுவது அதன் புதிய உரிமையாளருக்கு நன்மையே பயக்கும், ஏனெனில் அந்தப் பெயரின் பிரபலமற்ற கடந்த கால செயல்பாடானது அந்த நிறுவனத்தை எப்பொழுதுமே தொடர்ந்து கொண்டிருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
கேப்பிடல்வியா உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவர் திரு விவேக் குப்தா, "முதலீட்டாளர்கள் சந்தோஷப்பட வேண்டிய நல்ல விஷயம் இது, ஏனெனில் இப்போது அவர்கள் அனைத்து அம்சங்களிலும் மிகவும் சுத்தமான மற்றும் இந்தியாவின் முதல் ஐந்து ஐடி நிறுவனங்களின் பங்குதாரர்களாக உள்ளார்கள்", எனத் தெரிவித்தார்.
இந்த ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து, டெக் மகேந்திரா இந்தியாவின் முதல் ஐந்து ஐடி நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் வருவாய் 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இந்த வருவாயானது 2015 ம் ஆண்டில் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என எதிர்பார்க்கபடுகிறது.
"சத்யம் நாம் எல்லோருக்கும் தெரிந்த காரணங்களினால் அழிவின் விளிம்பில் இருந்தது. டெக் மகேந்திரா அந்த நிறுவனத்தின் படுதோல்விக்கு பின்னர் அதனை தன்னுடைய கைகளில் எடுத்து மீண்டும் ஒரு வெற்றிகரமான நிறுவனமாக நிலைநிறுத்தியுள்ளது", என அஸ்ஹிக பங்கு தரகு நிறுவனத்தினுடைய பங்கு ஆராய்ச்சி பிரிவின் துணைத் தலைவர் திரு பரஸ் போத்ரா தெரிவித்துள்ளார்.
இரண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைப்பினால் இது ஒரு மிகப் பெரிய மென்பொருள் நிறுவனமாக மாற்றியுள்ளது. மேலும் இந்த ஒருங்கிணைப்பானது மிகப் பெரிய அவுட் சோர்ஸிங் ஒப்பந்தங்களை அதனுடைய போட்டியாளர்களிடமிருந்து போட்டியிட்டு கைப்பற்றுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
"எங்களுக்கு, நீண்ட கால பங்குதாரர்களுக்கான செல்வத்தை உருவாக்கும் டெக் மகேந்திரா நிறுவனத்தின் செயல் திறன் மீது நம்பிக்கை உள்ளது," என போத்ரா கூறினார்.
சிஎன்ஐ (CNI) ஆராய்ச்சி நிறுவனத்தின் சிஎம்டி (CMD) திரு கிஷோர் பி ஒஸ்த்வால், "நான் டெக் மகேந்திரா உடனான இணைப்பிற்கு பின்னர், அந்நிறுவனத்தின் பிரகாசமான எதிர்காலத்தை பார்க்கின்றேன். டெக் மகேந்திரா ஒரு வலுவான நிறுவனமாக மாறி வருகிறது. மேலும் அந்த நிறுவனத்தின் எதிர்காலம் நன்றாக உள்ளது", எனத் தெரிவித்தார்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications