அதிக லாபம் தரும் ஸ்ரீராம் போக்குவரத்து என்சிடிக்கள்!!!

தொழில்முறை வாகனம் மற்றும் உதிரி பாகங்களின் நிதியீட்டின் மீது பிரதான கவனம் செலுத்தி வரும் ஒரு என்பிஎஃப்சி நிறுவனமான ஸ்ரீராம் போக்குவரத்து நிதி நிறுவனம் (எஸ்டிஎஃப்சி), பாதுகாக்கப்பட்ட மாற்ற இயலாத கடனீட்டு ஆவணங்களை (என்சிடிக்கள்) பொது விநியோகம் செய்ய முன் வந்துள்ளது.

இந்த பொது விநியோகம், உயரிய நிகர மதிப்பு கொண்ட தனிநபர்கள் (ஹெச்என்ஐக்கள்), இன்ஸ்டிட்யூஷனல், நான்- இன்ஸ்டிட்யூஷனல் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கும் வகையில், 2013 ஆம் வருடம் ஜூலை 16 ஆம் தேதியிலிருந்து 2013 ஜூலை 29 ஆம் தேதி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும். இந்த விநியோகம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கெடு தேதிக்கு மேல் நீட்டிக்கப்படுவதோ அல்லது இத்தேதிக்கு முன்பே மூடப்படுவதோ எதுவாகினும் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட இயக்குனர்களின் தீர்மானத்தின் படி செயல்படுத்தப்படும்.

எஸ்டிஎஃப்சியின் என்சிடிக்களுக்கு சந்தாதாரர் ஆகலாம் என்பதை ஆதரிக்கும் சில காரணங்கள்

அதிகமான வட்டி விகிதம்

அதிகமான வட்டி விகிதம்

வங்கி எஃப்டி விகிதங்களுடன் ஒப்பிடுகையில் அதிக ஆற்றல் வாய்ந்த ஈட்டுத்தொகை அளிக்கும் பாதுகாப்பானது என்சிடிக்கள். வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு சுமார் 9% வரை வட்டி வழங்கும் நிலையில், எஸ்டிஎஃப்சியின் என்சிடிக்கள் சுமார் 4 வருடங்கள் முதல் 5 வருடங்கள் வரையிலான மெச்சூரிட்டி காலத்தில், சுமார் 9.65% - 11.5% வரையிலான ஆற்றல் வாய்ந்த ஈட்டுத்தொகையை வழங்கும் சிறந்த முதலீட்டு திட்டங்களாக இருக்கிறது.

தனிநபர் முதலீட்டாளர்களுக்கான மூன்று மற்றும் ஐந்தாண்டு கால மெச்சூரிட்டி காலத்துக்கு, தலா 10.90 சதவீதம் மற்றும் 11.15 சதவீதம் ஆகும். தனிநபர் அல்லாதோர்க்கான மூன்றாண்டு மெச்சூரிட்டி காலத்துக்கு சுமார் 9.65 சதவீதமும், ஐந்தாண்டு காலத்துக்கு சுமார் 9.80 சதவீதமும் ஆகும்.

 

சரியும் வட்டி விகிதம்

சரியும் வட்டி விகிதம்

வட்டி விகிதங்கள் மேலும் சரியலாம் என்று எதிர்பார்க்கப்படுவதனால், சில்லறை முதலீட்டாளர்கள் என்சிடிக்களின் மூலம் கிடைக்கும் கூடுதல் ரிட்டர்ன்களை முதலீடாக மாற்றலாம். அண்மைக் காலத்தில் வட்டி விகிதங்கள் சரியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதினால், சில்லறை முதலீட்டாளர்கள் எஸ்டிஎஃப்சிக்களின் என்சிடிக்கள் அளிக்கக்கூடிய கூடுதல் ரிட்டர்ன்களான 123-125 அடிப்படைப் புள்ளிகளை இதர முதலீடுகளுக்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.

எளிதில் ரொக்கமாகக்கூடிய முதலீட்டு வாய்ப்பு

எளிதில் ரொக்கமாகக்கூடிய முதலீட்டு வாய்ப்பு

பொது விநியோகம் செய்யப்படும் என்சிடிக்கள் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படுவதனால், முதலீட்டுத் தொகையோடு, அம்முதலீட்டின் மூலதன மதிப்பேற்றத்தையும் சேர்த்து இந்த வர்த்தக வழியில் எளிதாக மீட்க முடியும்.

க்ரிஸில் மற்றும் கேர் மதிப்பீடு

க்ரிஸில் மற்றும் கேர் மதிப்பீடு

எஸ்டிஎஃப்சியின் என்சிடிக்களுக்கான இந்த பொது விநியோகத்தை, க்ரிஸில், ஏஏ/நிலையானது என்றும் கேர், ஏஏ+ என்றும் மதிப்பீடு செய்துள்ளன. இத்தகைய மதிப்பீடுகள், மூலதனம் மற்றும் வட்டித் தொகைகளை சரியான நேரத்தில் மீட்டெடுத்து வழங்கும் பொறுப்பைப் பொறுத்த வரையில் நிறுவனத்தின் சிறப்பான செயற்திறனுக்கு உத்தரவாதம் அளித்து, வலுவான பாதுகாப்பை நிச்சயக்கக்கூடியதாக விளங்குகின்றன. இருந்தும் கார்ப்பரேட் என்சிடிக்கள் அபாய வாய்ப்பைக் கொண்டுள்ளன, இவை அபாயமற்றவை என்று கூற இயலாது. ஆனால் வங்கி டெபாசிட்களுக்கு எவ்வித அபாயமும் இல்லை.

வரி பயன்கள்

வரி பயன்கள்

என்சிடிக்கள் மூலம் கிடைக்கும் வட்டித் தொகைக்கு டிடிஎஸ் கிடையாது. எனினும், வருமான வரி விவரத்தைத் தாக்கல் செய்யும்போது, இந்த வட்டி வருமானத்தை மொத்த வருமானத்தோடு சேர்த்து தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.

தொகுதி 1

தொகுதி 1

சுமார் 36 மாத காலத்துக்கு 10.9% வருடாந்திர கூப்பனைக் கொண்டு, ஆண்டு அடிப்படையில் வருமானத்தை அளிக்கும்.

தொகுதி 2

தொகுதி 2

அறுபது மாதங்கள் அல்லது 5 வருட கால அவகாசத்தில் 11.5% கூப்பன் விகிதத்தில், வருடாந்திர வருமானத்தையே அளிக்கும்.

தொகுதி 3

தொகுதி 3

அறுபது மாத கால அவகாசத்தில் 10.63% வருடாந்திர கூப்பனைக் கொண்டு, பணி ஓய்வு பெற்ற தனிநபர்கள் மற்றும் பென்ஷனர்களின் நிதித் தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் மாதாந்திர அடிப்படையிலான வருமானத்தை அளிக்கும்.

தொகுதி 4 மற்றும் தொகுதி 5

தொகுதி 4 மற்றும் தொகுதி 5

மூன்று மற்றும் ஐந்து வருடங்கள் என்ற கால அடிப்படையில் கூட்டு தொகையாக செயல்படுகின்றன. இவ்விரு தொகுதிகளும் ஒரு குறிப்பிட்ட ப்ரீமியம் தொகையில் மீட்கக்கூடியவையாகும். தொகுதி 4 மற்றும் தொகுதி 5 ஆகியவற்றுக்கு தலா 10.9% மற்றும் 11.15% என்று கணக்கிடப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+