ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வட்டி விகிதம் உயர்வு

ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வெளியிட்ட அறிக்கையில் 91-179 நாட்களில் முதிர்வு பெறும் வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம் 7.75 சதவிதத்தில் இருந்து 8.50 சதவிதமாக உயர்த்தியுள்ளது.இதில் 0.75 சதவிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
270 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கு குறைவான நாட்களில் முதிர்வு பெறும் வைப்பு நிதிகளுகான வட்டி விகிதத்தை 8.25 சதவிதத்தில் இருந்து 8.50 சதவிதமாக உயர்த்தியுள்ளது. இத்தகைய நிதி திட்டங்களில் 0.25% மட்டும் அதிகரித்துள்ளது.
மேலும், 180-269 நாட்களில் முதிர்வு பெறும் வைப்பு நிதிகளுக்கு 8% இருந்து 8.50% வரை உயர்த்தியுள்ளது.
இதனால் மக்கள் அதிகமான வட்டி விகிதத்திலும், பாதுகாப்பான முறையிலும் முதலீடு செய்யலாம்.


Click it and Unblock the Notifications