
உலக பொருளாதார நிலைமை மேம்படும் வரை ஏற்றுமதி மந்தமாக தான் இருக்கும் என்பதுதான் பொதுவான கருத்து. இதனால் ஏற்றுமதியை பற்றாக்குறையை ஈடுகட்ட இறக்குமதி பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும்படியான யோசனைகளை அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசு தங்க இறக்குமதியை குறைக்க மேலும் நடவடிக்கைகளை கொண்டு வரலாம் என்கின்றனர் நிதி அமைச்சக அதிகாரிகள். இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாகுறை 88 பில்லியன் யுஎஸ் டாலராக உள்ளது. இது மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதம் ஆகும். இது அரசின் இலக்கைவிட விட இரு மடங்கு ஆகும்.
தற்போது மொபைல் தொலைபேசிகளுக்கு 6 சதவீதம் இறக்குமதி வரி உள்ள நிலையில் டாப்லேட், கணிணிகள் மற்றும் மடி கணிணிகள் ஆகியவற்றுக்கு 12 சதவீதம் இறக்குமதி வரியை ஈர்க்க கூடும். கடந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் ப.சிதம்பரம், 2000 ரூபாய்க்கு அதிகமான மொபைல் தொலைபேசிகளுக்கு 1 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் வரி விதித்தார். கடந்த ஆறு மாதங்களில் தங்கம் இறக்குமதி வரி 4 சதவீதத்தில் இருந்து இரண்டு மடங்காக சுமார் 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
கணிணிகள், மடிக்கணிணிகள் மற்றும் கைக்கணிணிகளின் இறக்குமதி மதிப்பு 2009-2010ம் ஆண்டில் யுஎஸ் டாலர் 550 மில்லியன் டாலராக இருந்தது. இது 2012-2013ம் ஆண்டில் 1.6 பில்லியனாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பற்றக்குறையை சமன் செய்வதற்காக மொபைல்கள், டேப்லட்டுகள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களின் மீது கூடுதல் வரி விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
More From GoodReturns

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications