ஐடி துறையில் வேலைவாய்ப்பு 60% குறைந்தது!!

இந்தியாவின் பொருளாதார மந்த நிலையால் ஐடி துறையும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனம் 2013-14 நிதியாண்டின், இரண்டாம் காலாண்டில் வெறும் 3,400 நபர்களை மட்டுமே பணியில் அமர்த்தியுள்ளது. இதனால் இத்துறையின் வேலை வாய்ப்புகள் ஏப்ரல்- ஜூன் காலாண்டில் சுமார் 60% குறைந்துள்ளது.

கடந்த வருடத்தில் இதே காலாண்டை ஒப்பிடுகையில், இந்த முன்று நிறுவனங்களில் சுமார் 8,700 நபர்களை பணியில் அமர்த்தி உள்ளது.

இந்த அறிக்கையின் படி கடந்த ஆண்டு சுமார் 4,962 நபர்களை பணியில் அமர்த்திய டிசிஎஸ் நிறுவனம், இந்த வருடம் 1,390 நபர்களை மட்டுமே சேர்த்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனம் கடந்த வருடம் இதே காலாண்டில் 1,157 ஊழியர்களை பணியில் அமர்த்தியது, ஆனால் இந்த 575 நபர்களை மட்டுமே பணியில் சேர்த்துள்ளது.

ஐடி துறையில் வேலைவாய்ப்பு 60% குறைந்தது!!

விப்ரோ தனது ஐடி சேவை துறையில் கடந்த வருடம் 2,600 நபர்களை பணியில் அமர்த்தியது. ஆனால் இந்த வருடம் 1,496 ஊழியர்களை சேர்த்துள்ளது.

மேலும் இந்த மூன்று நிறுவனங்களும் 2013-14 வருடத்தின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச் மாதத்தில்) சுமார் 16,500 நபர்களை பணியில் அமர்த்தியது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+