பணப்புழக்கத்தை இறுக்கியது ஆர்பிஐ!!; வட்டி விகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் ரூபாய் மதிப்பை நிலைக்குக் கொண்டு வர மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, புதிய சில நடவடிக்கைகளை அறிவித்திருப்பதன் மூலம் லிக்விடிட்டியை மீண்டும் இறுக்கமாக்கியுள்ளது.

ஆர்பிஐ, லிக்விடிட்டி அட்ஜஸ்ட்மெண்ட் வசதியின் (LAF) கீழ் வங்கிகளுக்கு வழங்கி வந்த பணத்தை, வங்கியில் இருக்கக்கூடிய டெபாசிட்களில் சுமார் 0.5 சதவீதம் என்ற விகிதத்தில் குறைத்துள்ளது. இது ஒட்டுமொத்த வங்கி அமைப்புக்குமான சுமார் 1% அல்லது 75,000 கோடிகளோடு ஒப்பிடப்பட்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பணப்புழக்கத்தை இறுக்கியது ஆர்பிஐ!!; வட்டி விகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு!

 

"LAF உபயோகத்துக்கான ஒட்டுமொத்த வரையறை ஒவ்வொரு வங்கிக்கும், இரண்டாவதாக வரக்கூடிய இருவார காலக்கெடுவின் கடைசி வெள்ளிக்கிழமையில் இருக்கக்கூடிய அதன் சொந்த என்டிடிஎல் (NDTL) அவுட்ஸ்டாண்டிங்கில் சுமார் 0.5 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஜூலை 24, 2013 -இலிருந்து அமலாக்கம் செய்யப்பட்டு, மேற்கொண்டு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும்" என்று ஆர்பிஐ ஒரு வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

தற்போது, ஆர்பிஐயின் பரிந்துரைக்கிணங்க, வங்கிகள் அவற்றின் கேஷ் ரிசர்வ் ரேஷியோவை (CRR) தகவலறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய இருவார காலக்கெடுவின் போது, தினசரி அடிப்படையில் தேவைப்படக்கூடிய CRR-இலிருந்து குறைந்த பட்சம் 70 சதவீதத்தைக் கொண்டு சராசரியான தின அடிப்படையில் பராமரித்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றன.

அடுத்த தகவலறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய அடுத்து வரும் இருவார காலகட்டத்தில், அதாவது ஜூலை 27, 2013 முதல், தேவையான தொகையில் சுமார் 99 சதவீதத்தை, வங்கிகள் குறைந்த பட்ச தினப்படி CRR இருப்பாக வைத்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட உள்ளது.

மேற்கூறிய இரு நடவடிக்கைகளும், சுமார் 90,000 கோடி அளவுக்கு மதிப்பிடப்பட்டுள்ள வங்கி அமைப்பிலிருந்து லிக்விடிட்டியை வற்றச் செய்யும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. வங்கிகள் கடனாக வழங்குவதற்கு குறைவான தொகையையே கொண்டிருப்பதனால், தற்போது அவை டெபாசிட் விகிதங்கள் மற்றும் கடன் விகிதங்களை உயர்த்தக் கூடும்.

இந்நிலையில் அனைவரின் கண்களும் ஜூலை 30 இல் வெளிவரப்போவதாகக் கூறப்படும், ஆர்பிஐயின், மானிட்டரி பாலிஸியின் மேல் தான் இருக்கிறாது. ஆர்பிஐ, வீழ்ச்சிடைந்து கொண்டிருக்கும் ரூபாய் மதிப்போடு போராடிக் கொண்டிருக்கும் இச்சூழலில், நிபுணர்கள் இத்திட்டத்தில், மீள்வணிக விகித அதிகரிப்பை எதிர்பார்க்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI tightens liquidity again; interest rates set to rise

The Reserve Bank of India (RBI) in its bid to fight the falling rupee has squeezed liquidity again by announcing a fresh set of measures.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X