
ஜூலை-செப்டம்பர் மாத இறுதியில் தன்னுடைய வருமானம் 1.62-1.65 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வரலாம் என இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. நிறுவனத்தின் செயல்திறனை பற்றி விப்ரோவின் தலைவர் அசிம் பிரேம்ஜி கூறுகையில், "நேர்மறையான பொருளாதார வளர்ச்சி பெரியளவில் உள்ளதால், வாடிக்கையாளர்களின் மத்தியில், அதிக நம்பிக்கையுடன் இருக்கிறோம்". சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில், ஆபரேஷன் துறையில் நிறுவனத்தின் நிகர வருமானம் அமெரிக்க டாலர்களில் 11%-ஆக உயர்ந்துள்ளது. அதன் மதிப்பு 273 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
இதே காலத்தில் வருமானம் 5% உயர்ந்து 1.64 பில்லியன் அமெரிக்க டாலரை தொட்டது. " புதிய பல பெரிய வணிகங்கள் கிடைப்பதை நாங்கள் கண் கூட பார்க்கிறோம். இது இந்த காலாண்டில் அழுத்தமான வணிகத்தை ஏற்படுத்தும். எங்கள் வாடிக்கையாளர்கள் வளர்ச்சி அடையவும், லாபத்தை அதிகரிக்கவும், நிறுவனத்தின் நடவடிக்கைகளை சுறுசுறுப்பாக மாற்றவும் தொழில் நுட்பத்தை எதிர்பார்க்கிறார்கள்," என்று விப்ரோவின் தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குனர் TK குரியன் கூறியுள்ளார்.
விப்ரோவின் ஐ.டி. சேவைகளின் வருமானம் ஒவ்வொரு வருடமும் 4.9% கூடுகிறது. அதன் தொடர்ச்சியாக 0.20% அதிகரித்து 8,936 கோடி ரூபாயாக நிற்கிறது. விப்ரோவின் வருமான வளர்ச்சி அதன் போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் பின்தங்கியே நிற்கிறது. இந்த காலாண்டில் TCS மற்றும் இன்போசிஸ்சின் வருமானம் 21% மற்றும் 17% வரை உயந்துள்ளது. TCS-இன் முதல் காலாண்டின் லாபம் 16% ஆக உயர்ந்துள்ளது. இதுவே இன்போசிஸ்சின் லாபம் 3.7% அதிகரித்துள்ளது. நேற்று பாம்பே பங்குச் சந்தையில் விப்ரோ பங்குகள் அதிகபட்சமாக 1.74%-க்கு 408.50 ரூபாய்க்கு மூடப்பட்டுள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications