கிரெடிட் மற்றும் டெபாஸிட் வளர்ச்சியில் சரிவு!!!: தலைவலியுடன் வங்கிகள்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிக அளவிலான வட்டி விகிதங்கள் மற்றும் உயர்ந்து கொண்டே செல்லும் பணவீக்கம் ஆகியவை கிரெடிட் மற்றும் டெபாஸிட் வளர்ச்சியை பாதிப்பதனால் இந்திய வங்கிகள் ஓய்வு ஒழிச்சலின்றி பணியாற்ற வேண்டியுள்ளது. சமீபத்தில் வெளியான ஆர்பிஐயின் தகவலறிக்கையின் படி, சென்ற வருடத்தோடு ஒப்பிடுகையில் இந்த வருடம், ஜூலை 12 ஆம் தேதியை நோக்கிய இரு வார காலக்கெடுவின் போது, இந்திய வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபாஸிட் வளர்ச்சி தலா 14.2 சதவீதம் மற்றும் 13.7 சதவீதமாக இருந்துள்ளது.

இவை, மத்திய வங்கியினால் இந்த நடப்பு நிதியாண்டில் இருக்க வேண்டியதாக முன்மொழியப்பட்ட சதவீதங்களான தலா 14 மற்றும் 15 சதவீதங்களைக் காட்டிலும் சற்றே குறைவாகக் காணப்படுகின்றன.

 

இருவார கால அடிப்படையில், ஜூலை 12 ஆம் தேதியோடு முடிவடையும் இருவார காலக்கெடுவின் போது, வங்கிகளின் கிரெடிட் சுமார் 16,620 கோடி ரூபாய் வரையிலும், டெபாஸிட்கள் சுமார் 10,300 கோடி ரூபாய் வரையிலும் சரிவடைந்துள்ளதாகவும் இந்த தகவலறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரெடிட் மற்றும் டெபாஸிட் வளர்ச்சியில் சரிவு!!!: தலைவலியுடன் வங்கிகள்..

சில்லறை டெபாஸிட்களின் வட்டி விகிதங்கள் கூட அதிகமாக இருக்கும் இவ்வேளையில், டெபாஸிட்கள் தொடர்ந்து மந்தமாகவே இருப்பது வங்கிகளுக்கு பெரிய தலைவலியாக இருக்கின்றது. ஆர்பிஐயின் வட்டி விகிதங்களின் குறைப்பையும் மீறி, வங்கிகள் பெரும்பாலும் அவற்றின் டெபாஸிட் விகிதங்களை மாற்றாமல் அதே அளவிலேயே வைத்திருக்கின்றன.

எனினும், பொதுவாக நடப்பு நிதியாண்டின் முன்பாதியில் மந்தமாக இருக்கும் கிரெடிட் வளர்ச்சி பின்பாதியில் சீராகத் தொடங்கும் என்று வங்கியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Banks' credit, deposit growth continues to languish

Indian banks have no respite as high interest rates and rising inflation continue to affect both credit and deposit growth.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?