அதிகமாக வருமான வரி கட்டும் 10 பேரின் விவரங்களை வெளியிடுவதில் பிரச்சனை!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிகமாக வருமான வரி கட்டும் 10 பேரின் விவரங்களை வெளியிடுவதில் பிரச்சனை!!
அதிகமாக வருமான வரி கட்டும் முதல் 10 நபர்கள், நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் விவரங்களை வெளியிடுமாறு வருமான வரி துறைக்கு மத்திய தகவல் ஆணைக்குழுவிற்கு (CIC) கட்டளையிட்டுள்ளது.

இந்த தகவல்களை வெளியிட்டால் அந்த நபர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்குமென்றும் மற்றவர்களையும் நாணயத்தோடு வரி கட்ட வைக்கும் என்றும் தகவல் ஆணையர் எம்.எல்.ஷர்மா கூறியுள்ளார்.

இதனை மறுத்த வருமான வரித்துறை, ரகசியமாக வைத்திருக்கும் இத்தகவலை வெளியிட்டால், அது வரி கட்டும் அந்த நபர்கள் உயிருக்கு ஆபத்தை வரவழைக்கலாம் என்று கூறியுள்ளது. அதற்கு பதிலளித்த ஷர்மா சில வருடங்களுக்கு முன் இத்துறை அதிகமாக வரி கட்டிய நபரை வெளிப்படையாக பாராட்டியது எதற்கு என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

"இந்த பழக்கம் தற்போது நடைமுறையில் உள்ளதா இல்லையா என்பது எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், வரி கட்டுபவர்களின் பெயரை வெளியிடுவதால் மத்திய வருமானத்தில் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. மேலும் வரி கட்டும் அந்த நபர்களுக்கு இது ஊட்டமளிக்கும் வகையில் இருக்கும். மற்றவர்களையும் நாணயத்தோடு வரி கட்ட வைக்கும்," என்று கூறியுள்ளார்.

வருமான வரித் துறையினர் கூறிய விதி விலக்கு சட்டங்கள் உடனடியாக அமுலுக்கு வராது என்றும் அவர் கூறியுள்ளார்.

"இந்த தகவலை வெளியிடக்கூடாது என்று சொல்வதற்கு ஒரு காரணமும் நான் பார்க்கவில்லை. ஆணையத்தின் இந்த முடிவின் மீதான வழக்கை, வருமான வரித்துறையின் பிரதிநிதியான ஸ்ரீ அப்ரோல், ராஜ் குமாரி வருமான வரித்துறையை எதிர்த்து நடத்திய வழக்கை முன் வைத்து நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த வழக்கின் தகவல்கள் இந்த வழக்கிற்கு உதவாது," என்று கூறியுள்ளார்.

எஸ்.சி.அகர்வால் சமர்ப்பித்த இந்த மனு விசாரணைக்கு வந்த போது இந்த ஆணையம் வருமான வரி கட்டாத நபர்களை பற்றியும் வெளியிட ஆணை பிறப்பித்துள்ளது. (இந்த தகவல்கள் ஏற்கனவே பொது உடைமையில் இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Disclose top 10 Income Tax assessees: CIC to I-T dept

The Central Information Commission has directed the Income Tax department to disclose the list of top 10 Income Tax assessees among individual, companies and charitable organisations categories.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X