வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை உடனடியாக ஆதார் எண்ணை சமர்ப்பிக்க அணுகுமாறு நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. துரிதமான முறையில் டைரக்ட் பெனிபிட் ட்ரான்ஸ்பர் (DBT) திட்டம் செயல்பட தடையில்லா பண மாற்ற பயன் இருக்க வேண்டும். அதை உறுதி செய்யவே நிதி அமைச்சகம் இதனை கேட்டுக்கொண்டுள்ளது.
நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், "வாடிக்கையாளர்களை நேரடியாக சந்தித்து அவர்களுடைய ஆதார் எண்ணை அவர்களின் வங்கி கணக்கோடு இணைக்குமாறு வங்கிகளின் தலைவர்கள் அனைவரையும் அறிவுறுத்த இன்று என் அலுவலக பணியாளர்களை கேட்டுக் கொண்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.
DBT திட்டம்
DBT திட்டம் தற்போதைய நடைமுறையை பெரிதளவில் மாற்றும் என்று கூறும் அவர், "ஆதார் எண்ணை வங்கிக் கணக்கோடு இணைக்கும் வேலை 80% முடிவடையும், அது சாதிக்கக் கூடிய ஒரு அளவீடு. மேலும் இது தொடர்பாக இன்று வெளியேறும் எங்கள் குழுவின் முயற்சியால் இதர மாவட்டங்களிலும் இந்த பனி வேகமாக முடிவடையும்". என்றும் கூறியுள்ளார்.
சிலிண்டர் மானியம்
சிலிண்டர் (LPG) மானியம் மாறுதலை பற்றி அவர் கூறுகையில், "இது சுலபமாக மாற்றக் கூடிய மானியம் தான். எண்ணெய் நிறுவனங்களுக்கு பணம் கட்டக் கூடியது ஒருவர் மட்டுமே; அது இந்திய அரசாங்கம் மட்டுமே." சிலிண்டர் மானியம் பற்றி அவர் மேலும் கூறுகையில், இன்னும் ஒரு ஆண்டு காலத்திற்குள் நாடு முழுவதும் அது திரும்பி பெற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
DBT திட்டத்தின் லட்சியம்
DBT திட்டத்தின் லட்சியமே பணத்தை வங்கி மூலமாக பரிமாற்றம் செய்வது தான். அதற்கு வங்கியில் தற்போது இருக்கும் முறையையும் சேர்த்து ஆதார் பெரிய தளமாக துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.
உணவு மற்றும் உரத்திற்கான மானியம்
DBT திட்டம் ஜூலை 1 முதல் 121 மாவட்டங்களில் செயல்பட தொடங்கியுள்ளது. உணவு மற்றும் உரத்திற்கான மானியம் மாறுதலுக்கும் கூட DBT செயல்பாடு விரிவாக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications