
"இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கம் யாதெனில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் எந்த ஒரு நிறுவனமும் பணம் சம்பாதிப்பதைத் தடுப்பதோடு ஏதேனும் நலத்திட்டம் என்ற போர்வையின் கீழ் கூட்டு முதலீட்டுத் திட்டங்களை செயல்படச்செய்து அதன் மூலம் பணம் பண்ணுவதை தடுக்க வேண்டும் என்பதே ஆகும்." என்றும் திரு பைலட் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், செபிக்கு தற்போது அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, பொன்ஸித் திட்டங்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் போலி திட்டங்களை தடை செய்து, அந்நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதமான முறையில் நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்தும் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
"அனைத்திலும் ஒரு ஒழுங்குமுறை கட்டாயமாக்க் கடைபிடிக்கப்படுவதான ஒரு சூழல் இருப்பதை உறுதி செய்வதோடு, மக்கள் தாங்கள் அரும்பாடுபட்ட பணத்தை யாரிடமேனும் ஏமாந்து விடாமல் இருப்பதற்கும் பாடுபட்டு வரும் செபியின் முயற்சிகள் அனைத்திலும் கார்ப்பொரேட் அஃபயர்ஸ் அமைச்சகம் உறுதுணையாக இருக்கும்." என்றும் சச்சின் பைலட் உறுதியளித்துள்ளார்.
இதற்கு இடையில், நிறுவனங்களுக்கான மசோதா பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications