அப்பாடா ஒரு வழியாக FMCG பங்குகள் பற்றிய முதலீட்டாளர்களின் எண்ணம் மாறியது!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேகமாகவும், சீற்றத்துடனும் முன்னேறி வந்த FMCG பங்குகளின் விலை தற்பொழுது குறையத் தொடங்கி உள்ளது. FMCG நிறுவனப் பங்குகள் ஆரம்ப கால லாபங்களை விட்டுக் கொடுத்து விட்டு, குறைந்த விலையில் விற்பனையாகின்றன. இதன் மூலம் முதலீட்டாளர்கள் தற்பொழுது தங்களது முதலீட்டு முடிவுகளை இன்னும் தீவிரமாக பகுத்தறிந்து எடுத்து வருவது கண்கூடாக தெரிகின்றது.

ஐடிசி நிறுவனம்

ஐடிசி நிறுவனம்

இவை அனைத்தும் ஐடிசி நிறுவனப் பங்குகளின் விலைச் சரிவில் ஆரம்பித்தது. கடந்த வியாழனன்று ஐடிசி நிறுவனப் பங்குகள் சுமார் 4 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. இந்தச் சரிவு அந்த நிறுவனம் தன்னுடைய வருவாய் முடிவுகளை அறிவித்த பின்னர் தொடங்கியது.

அதாவது அந்த நிறுவனத்தின் வருவாய், சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால் இந்தச் சரிவு ஏற்பட்டது. இது ஒரு முழுமையான FMCG பங்காக இல்லாது போயினும் அது ஒரு தற்காப்பு பங்காகும். அது கடந்த சில வாரங்களாகவே வீழ்ச்சியை சந்திக்க தொடங்கி விட்டது.

 

இந்துஸ்தான் யூனிலீவர்

இந்துஸ்தான் யூனிலீவர்

ஐடிசி நிறுவனத்தின் அடி யொற்றி இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனப் பங்குகளும் வியாழக்கிழமை அன்று சரிவை சந்தித்தன. மேலும் அந்த நிறுவனப் பங்குகள் வெள்ளியன்று சுமார் 3.26 சதவீத சரிவை சந்தித்தது. நெஸ்லே, கோல்கேட் மற்றும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் போன்ற அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் வெள்ளிக்கிழமை அன்று சரிவை சந்தித்தன.

8 சதவீத வீழ்ச்சி

8 சதவீத வீழ்ச்சி

வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட HUL நிறுவன வருவாய் முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் அந்த நிறுவனப் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. புதனன்று ரூ 725 வரை விற்பனையான இந்த நிறுவனப் பங்குகள் வெள்ளியன்று சுமார் 8 சதவீத வீழ்ச்சியை சந்தித்து ரூ 662 என்கிற அளவில் விற்பனையாயின.

HUL நிறுவனப் பங்குகள் 40 மடங்கு அதிக விலை

HUL நிறுவனப் பங்குகள் 40 மடங்கு அதிக விலை

ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன பங்குகளின் விலை அதன் அடிப்படை விலையில் இருந்து சுமார் 40 மடங்கு அளவிற்கு விற்பனை ஆனது. மேலும் இந்த நிறுவனப் பங்குகளின் விலை அதன் புத்தக மதிப்பை விட சுமார் 40 மடங்கு அதிகமாகவும் இருந்தது. எப்படிப் பட்ட நிறுவனமாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் பங்குகளை, எவ்வாறு புத்தக மதிப்பை விட 40 மடங்கு விலை கொடுத்து வாங்குவது. எனவே HUL நிறுவனப் பங்குகள் அளவு கடந்த விலையில் விற்பனையாவது தெளிவாக தெரிகின்றது.

ஐடிசி நிறுவன பங்குகள் 35 மடங்கு அதிக விலை

ஐடிசி நிறுவன பங்குகள் 35 மடங்கு அதிக விலை

இதே போன்று ஐடிசி நிறுவனத்திலும் முதலீட்டாளர்கள் திடீரென்று அந்த நிறுவனப் பங்கு அதன் முன்னோக்கிய வருவாயை விட சுமார் 35 மடங்காக மதிப்பிடப்படுகிறது என்பதை உணர்ந்து கொண்டார்கள்.

FMCG, மருந்து மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை  நிறுவனங்கள்

FMCG, மருந்து மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனங்கள்

மோசமான பொருளாதார நிலைமைகள் காரணமாக முதலீட்டாளர்களுக்கு மிகக் குறைந்த முதலீட்டு வாய்ப்புகளே தற்பொழுது உள்ளன. அவர்களால் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் வங்கி, உள்கட்டமைப்பு, உலோகம், ரியல் எஸ்டேட், அல்லது ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் முதலீடு செய்ய முடியாது. அவர்களால் வேறு எங்கு செல்ல முடியும். முதலீட்டாளர்கள் அனைவரும் FMCG, மருந்து மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை நிறுவனங்களின் பின் அணி திரண்டார்கள். ஏனெனில் இந்த துறைகளில் பெயரளவிற்கேனும் வளர்ச்சி உள்ளது. ஆகவே முதலீட்டாளர்கள் இத்தகைய நிறுவனப் பங்குகளை துரத்தி அந்த நிறுவனப் பங்குகளை உச்சாணிக் கிளையில் உக்கார வைத்து விட்டார்கள்.

விளைவுகள்

விளைவுகள்

குறைந்து வரும் ஐடிசி மற்றும் HUL நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய, முதலீட்டாளர்கள் நன்கு சிந்தித்து முடிவை எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். ஏனெனில் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட துறை அல்லது நிறுவனப் பங்குகளை அதிக விலை கொடுத்து துரத்துவதை கைவிட்டனர். இந்த மாற்றம் நல்லதே!!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Finally some sanity returning to FMCG stocks

After having seen a fast and furious rally in their share prices, FMCG stocks have given up some gains as investors have now started becoming more rational in their investment decisions.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X