
பணவீக்கம் மட்டுப்பட்டுக் கொண்டு வரும் இவ்வேளையில், அதிக அளவிலான சிஏடி மற்றும் ரூபாயின் வீழ்ச்சி ஆகியவற்றிக்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவை என்று சுட்டிக்காட்டி, அதனால் முக்கிய பாலிஸி விகிதங்களில் தன் நிலைப்பாட்டை அப்படியே தொடர முடிவெடுத்திருக்கும் ஆர்பிஐயின் தீர்மானத்திற்குப் பிறகே ராஜன் அவர்களின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
"நாங்கள் ஏற்கெனவே அந்நிய நேரடி முதலீட்டை தாராளம் ஆக்குவதற்கான சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். சிஏடிக்கு நிலையான மற்றும் தொடர்ச்சியான நிதி பரிபாலனம் செய்யக்கூடிய இதர வாய்ப்புகளையும் நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி நாங்கள் அடுத்த சில வாரங்களில் அறிவிப்போம்." என்று அவர் கூறியதாக மீடியா தகவலறிக்கை ஒன்று உரைக்கிறது.
பல்வேறு பணிகளுக்கிடையில், பிரதமர் மன்மோஹன் சிங் அவர்கள் சிஏடியை குறைப்பதற்கான வழி வகைககளைப் பற்றி கடந்த திங்களன்று தொழிற்துறை ஜாம்பவான்களுடன் விவாதித்திருக்கிறார். அந்நிய முதலீட்டாளர்களுக்கு சவரன் பத்திரங்கள் வழங்குதல், அத்தியாவசியமல்லாத இறக்குமதிகள் மீதான சுங்க வரியை உயர்த்துதல், ஏற்றுமதிகளுக்கு சலுகையளித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் பற்றி தொழிற்துறை தலைவர்களும், பிரதமரும் விவாதித்துள்ளனர்.
"இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதற்குண்டான கடமைகளை செவ்வனே செய்து வந்தாலும், இறக்குமதிகளை குறைப்பது, ஏற்றுமதிகளை விரிவாக்கம் செய்வது மற்றும் ஊக்குவிப்பது போன்ற சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமா என்று ஆராய்வதன் மூலம் அரசாங்கமும் சிஏடியை குறைக்க பிரயத்தனம் மேற்கொண்டுள்ளது." என்றும் திரு ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications