
ஜூன் 30 தேதி முடிவடைந்த காலாண்டில், 1228 மில்லியன் அமெரிக்க டாலர்களாக ஏற்றம் கண்டுள்ள வருவாய், 31 விழுக்காடு வளர்ச்சி ஒவ்வொரு காலாண்டிலும் அதிகரிக்கிறது. 25000 கோடிகளை தாண்டிய 2013 நிதி ஆண்டிற்கான மொத்த வருவாய், 25,734 கோடி என்ற அளவில் உள்ளது.
2013 நிதி ஆண்டிற்கான வருவாய் நிலவரம் "சந்தையின் போக்கையும், வாடிக்கையாளர்களின் திருப்தியையும் வெளிக்காட்டியுள்ளது என்றும், தம் நிறுவனம் மாறிவரும் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வணிக முறைகளை மாற்றி அமைப்பதிலும், புதிய வழிமுறைகளை கண்டறிந்து செயல்படுவதிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை வியுக அதிகாரி ஷிவ் நாடார் தெரிவித்தார்
அந்நிறுவனத்தின் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பகுதிகளின் வருமானம் 2.8 மற்றும் 9.6 விழுக்காடு உயர்ந்துள்ளது. பொதுத்துறை சேவை சார்ந்த வருவாய் 7.3 விழுக்காடும், தொலைதொடர்புத்துறை வருவாய் 5.9 விழுக்காடும், நிதித்துறை சேவை சார் வருவாய் 5.8 விழுக்காடும் மற்றும் உற்பத்தி துறை வருவாய் 4.7 விழுக்காடும் அதிகரித்து உள்ளன.
"இந்த காலாண்டின் திருப்திகரமான முடிவுகளின் ஊடாக, இந்த நிதியாண்டை நல்ல நிலையில் கடந்துள்ளோம். நிகர வருமான ஈட்ட அளவு 400 புள்ளிகள் (bps) உயர்ந்து, 16 விழுக்காடு வளர்ச்சி (ஐந்தாண்டில் அதிக வளர்ச்சி) பெற்றுள்ளது. நாங்கள் இந்த ஆண்டில் பெற்ற 34 விழுக்காடு முதலீட்டின் மீதான ஈட்டல் (ROE) ஒட்டுமொத்த மென்பொருள் துறையின் சிறந்த நிலையாகும். 68 விழுக்காட்டில் உள்ள வட்டி, வரி,மதிப்பிறக்கம் மற்றும் கடன்கழிப்பிற்கு முந்தைய வருவாய் (EBITDA) என்பது மிகச்சிறந்த நிலையாகும்" என்று நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அனில் சனனா தெரிவித்துள்ளார்


Click it and Unblock the Notifications