
2011 ஆம் ஆண்டிலிருந்து மூன்றாவது முறையாக இந்த வருடமும் இன்ஃபோசிஸின் சீனா கிளை இந்த விருதை வென்றுள்ளதாக இந்நிறுவனம் பாம்பே பங்கு சந்தைக்கு சமர்ப்பித்த ஒரு ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், சீன கழகம் ‘2013 ஆண்டின் சீன அவுட்சோர்ஸிங் துறையின் தலைசிறந்த பங்களிப்பாளர்கள் விருதை' இன்ஃபோசிஸ் சீனாவின் முதன்மை நிர்வாக அதிகாரியான திரு ரங்கராஜன் வேலமோர் அவர்களுக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
"இத்துறையில் முதன்மை சர்வீஸ் புரொவைடராகத் திகழும் இன்ஃபோசிஸ் சீனா நிறுவனம், உள்ளூர் மற்றும் உலகளாவிய வாடிக்கையாளர்களுடனான அதன் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதோடு, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து, கன்ஸல்டிங், ஐடி சேவை மற்றும் பிசினஸ் பிராசஸ் அவுட்சோர்ஸிங் போன்ற துறைகளுக்கு மேலான சேவை வழங்குவதற்கும் அயராது பாடுபடும். எங்கள் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்துக்கும், இந்த ஆண்டின் தலைசிறந்த பங்களிப்பாளராக தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டதற்கும் நான் என் தனிப்பட்ட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்ஃபோசிஸ் சீனா அணி உள்ளூர் மற்றும் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுவதை தொடர்வதோடு, உயர்ந்த தரம் வாய்ந்த சேவையை வழங்கி, எதிர்காலத்தில் மேலும் பல உள்ளூர் பணி வாய்ப்புகளை உருவாக்கவும் பாடுபடும்." என்று இன்ஃபோசிஸ் சீனாவின் சிஇஓ ரங்கராஜன் வேலமோர் அவர்கள் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications