டெல்லியில் பொதுப் போக்குவரத்து வாகன ஓட்டுனர்களுக்கு இலவச காப்பீட்டு திட்டம்!!

டெல்லி: தலைநகர் டெல்லியில் இயற்கை எரிவாயுவினால் ஒட்டக்கூடிய பொதுப்போக்குவரத்து வாகனங்களை ஒட்டும் ஏறக்குறைய மூன்று இலட்சம் வாகன ஓட்டுனர்களுக்கு இலவச காப்பீடு வழங்கும் திட்டம் மிகுந்த ஆரவாரங்களுக்கிடையே தொடங்கிவைக்கப்பட்டது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் M.வீரப்பமொய்லி மற்றும் டெல்லி முதல் அமைச்சர் ஷீலா தீட்சித் ஆகியோரால் தலைநகர் டெல்லியில் துவங்கப்பட்ட இந்த காப்பீட்டு திட்டம், CNG எரிபொருளால் ஓடும் வாகனங்களை இயக்கும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கு விபத்து மூலம் ஏற்படும் மரணம், நிரந்தர ஊனம் போன்ற நிகழ்வுகளுக்கு காப்பீட்டு வழங்கப்பட்டது.

மகாசுரக்ஸா யோஜனா திட்டம்

மகாசுரக்ஸா யோஜனா திட்டம்

டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்காக, மே 2006 ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்ட "மகாசுரக்ஸா யோஜனா" திட்டத்தினை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் என்ற நிறுவனம், டெல்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா, காசியாபாத் நகரங்களில் செயல்படுத்தும்.

இந்த திட்டம் டெல்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா, காசியாபாத் நகரங்களில் பதிவு செய்யப்பட்ட, CNG எரிபொருளால் ஓடும் வாகனங்களை இயக்கும் மூன்று லட்சம் ஓட்டுனர்களுக்கு காப்பீடு வழங்கப்படும்

 

 

காப்பீட்டு பயன்கள்

காப்பீட்டு பயன்கள்

ஒருவேளை ஓட்டுனர் இறக்கும் தருவாயில், அவரது குடும்பத்திற்கு ரூபாய் 1.5 லட்சம் தரப்படும். மேலும் , குழந்தையின் கல்விச்செலவுக்கு தலா 25,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய்க்கு மிகாமல் தரப்படும்.

IGL நிறுவனம்

IGL நிறுவனம்

"35 லட்சம் ரூபாயை ஆண்டு தவணையாக IGL நிறுவனம், ஓட்டுனர்களின் சார்பாக செலுத்தும்" என்று கூறிய வீரப்ப மொய்லி, மேலும் அவர் கூறுகையில் " நாங்கள் ஏகப்பட்ட காலவிரயம் ஏற்படுத்தி விட்டோம், ஆனால் செயல்படவில்லை. டெல்லி மாநிலத்தில் ஷீலா தீட்சித் சிறப்பாக செயல்படுகிறார்."

2.5 இலட்சம்  ஓட்டுனர்களுக்கு உதவும்

2.5 இலட்சம் ஓட்டுனர்களுக்கு உதவும்

"காப்பீட்டு திட்டத்திற்கு, ஓட்டுனர்கள் தவணைத்தொகை எதுவும் செலுத்த தேவை இல்லை எனவும், இந்த திட்டம் 2.5 இலட்சம் ஓட்டுனர்களுக்கு உதவும் நோக்கில் கொண்டுவரப்பட்டதாகவும்" என்று ஷீலா தீட்சித் கூறினார். மேலும் ஓட்டுனர்களுக்கு உதவுவதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இலவச காப்பீட்டுத் திட்டம்

இலவச காப்பீட்டுத் திட்டம்

"இந்த திட்டம் பொதுபோக்குவரத்து வாகன ஓட்டுநர்களுக்கு இலவசமாக கொண்டுவரப்பட்டதாகவும், தவணைத்தொகையை IGL நிறுவனம் செலுத்தும்" என IGL நிறுவனர் K.K.குப்தா கூறினார். விபத்தின் போது ஏற்படும் காயங்களுக்கு ஆகும் மருத்துவ செலவுகளுக்கு அதிக பட்சமாக 10,000 ரூபாய் வரை தரப்படும் என்றும் விபத்தினால் ஏற்படும் உடல் ஊனங்களுக்கு, குறைந்தபட்சம் 1,500 முதல் 75,000 ரூபாய் வரை ஊனத்தின் தன்மைக்கேற்ப வழங்கப்படும் எனவும் K.K.குப்தா கூறினார்.

CNG எரிபொருள் ஓட்டுநர்களுக்கு மட்டும்

CNG எரிபொருள் ஓட்டுநர்களுக்கு மட்டும்

முறையான ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கிழே பயனடைய இயலும். மூன்று லட்சம் பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவர்

இத்திட்டம் எதிர்காலத்தில் CNG எரிபொருளுக்கு மாறும் ஓட்டுநர்களுக்கும் பயனளிக்கும். தற்போது ஏறைக்குறைய அனைத்து டாக்ஸி மற்றும் ஆட்டோ ரிக்ஸாக்களும் CNG எரிபொருளுக்கு மாறிவிட்டன.

 

 

சுனிதா சௌத்ரி

சுனிதா சௌத்ரி

சுனிதா சௌத்ரி, இத்திட்டத்தின் கீழ் காப்பீட்டு ஒப்பந்தங்களை பெற்ற முதல் ஆட்டோ ஓட்டுனர் ஆவார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+