துபாய் ரியல் எஸ்டேட் துறையில் அதிகளவு முதலீடு செய்துள்ள இந்தியர்கள்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துபாய்: துபாயின் ரியல் எஸ்டேட் துறையில் அதிகளவு முதலீடு செய்துள்ள வெளிநாட்டவர்கள் வரிசையில் இந்தியர்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளார்கள். உத்தியோகப்பூர்வ அறிக்கையின் படி 2013 ம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியர்கள் சுமார் 132.6 பில்லியன் டாலர் அளவிற்கு முதலீடு செய்துள்ளார்கள்.

துபாய் நில துறையானது புள்ளி விபரங்களின் அடிப்படையில் அரை ஆண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை ரியல் எஸ்டேட் துறைக்கான முதலீடு கணிசமாக அதிகரித்து 877.5 பில்லியன் டாலர் என்கிற அளவை தொட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013 ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியர்கள் துபாய் ரியல் எஸ்டேட் துறையில் சுமார் 132 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளார்கள். சென்ற 2012ஆம் ஆண்டில் இதே துறையில் இந்தியர்களின் முதலீடு சுமார் 149 பில்லியன் டாலர் என்கிற அளவிலேயே இருந்தது என்று அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

 

துபாய் ரியல் எஸ்டேட் துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமக்களின் முதலீடு ரூ 199 பில்லியன் டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டு அவர்களால் செலவழிக்கப்பட்ட முழு தொகைக்கு சமமாகும்.

துபாய் ரியல் எஸ்டேட் துறையில் அதிகளவு முதலீடு செய்துள்ள இந்தியர்கள்!!!

"துபாய் நாட்டின் ரியல் எஸ்டேட் சந்தையானது அதன் ஸ்திரத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் முதலீடு மீதான உயர் வருவாய் போன்ற காரணிகளால் இலாபகரமான ஒன்றாக திகழ்கின்றது. இந்த காரணிகள் தொடர்ந்து உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களீன் நம்பிக்கையை பெற்று வருகின்றது. முதலீட்டாளர்களின் தொடர் முதலீடானது துபாய் ரியல் எஸ்டேட் சந்தையை எப்பொழுதும் கவர்ச்சிகரமாக வைத்திருக்கின்றது. அது உலகளாவிய நிதி நெருக்கடியில் இருந்து முழுமையாக துபாய் பொருளாதாரத்தை மீட்பதற்கு உதவுகின்றது", என சுல்தான் பூட்டி பின் மெஜ்ரென், நில மேம்பாட்டு துறையின் இயக்குனர், தெரிவித்தார்.

முதலீட்டு தரவுகளை பகுத்தறிந்து பார்க்கும் பொழுது துபாய் ரியல் எஸ்டேட் துறையில் அரபு முதலீட்டாளர்கள் பங்களிப்பு ரூ 82.7 பில்லியனாக இருக்கின்றது. கடந்த ஆண்டை விட இது சுமார் 111 சதவீதம் அதிகமாகும். வளைகுடா முதலீட்டாளர்கள் சுமார் 264.8 பில்லியன் ரூபாய்க்கு முதலீடு செய்துள்ளார்கள். இது கடந்த ஆண்டை விட சுமார் 57 சதவீதம் அதிகமாகும். பிற வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு சுமார் 73 சதவீதம் அதிகரித்துள்ளது.

புள்ளி விபரங்கள் பிரிட்டிஷ் முதலீட்டாளர்கள் சுமார் 66.3 பில்லியன் ரூபாயும், பாகிஸ்தான் முதலீட்டாளர்கள் ரூ 49.7 பில்லியன் ரூபாயும் முதலீடு செய்துள்ளதாக சுட்டிக் காட்டுகின்றன.

"அதிகரித்துள்ள பல்வேறு பின்னணியைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கையானது எவ்வாறு துபாய் அரசின் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் வெற்றி அடைந்துள்ளது என்பதை உலகுக்கு பறை சாற்றுகின்றன. துபாய் அரசின் கொள்கைகள் நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகள் உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பை விரும்பும் முதலீட்டாளர்களை துபாயை நோக்கி ஈர்பதில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கியுள்ளது", என பின் மெஜ்ரென் கூறினார்.

மொத்த வளைகுடா முதலீட்டாளர்கள் மத்தியில் ஐக்கிய அரபு எமிரேட் குடிமக்கள் சுமார் 2,765 பேர் துபாயில் முதலீடு செய்து முதலிடத்தை பிடித்திருக்கின்றார்கள். சவுதி அரேபியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கின்றார்கள். சவுதி அரேபிய முதலீட்டாளர்கள் சுமார் 605 பேர் துபாயில் முதலீடு செய்துள்ளார்கள். குதைத்தைச் சேர்ந்த சுமார் 141 முதலீட்டாளர்கள் துபாயில் முதலீடு செய்து குவைத்துக்கு மூன்றாம் இடத்தை பெற்று தந்திருக்கின்றார்கள். குவைத்தை தொடர்ந்து கத்தார், ஓமன் மற்றும் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் அடுத்தடுத்த இடத்தை பிடித்திருக்கின்றார்கள்.

 

பின் மெஜ்ரென், "நிலத் துறையால் பொருளாதார மீட்சியை குறிக்கோளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட உத்திகள் ஏராளமான முதலீடுகளை துபாய் நோக்கி ஈர்த்துள்ளது. அரசின் மிகப் பெரிய திட்டங்களுக்கான ஆதரவு மற்றும் கவர்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்புகளைப் பற்றிய விளம்பரங்கள் துபாய் ரியாலிடி துறைக்கு அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது", என்று கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indians top foreign investors in Dubai realty

Indians are top foreign investors in Dubai's real estate market, with transactions of over Rs 132.6 billion made by them during the first half of 2013, according to an official report.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?