இந்தியாவின் பெரிய தலைகளுடன் பிரதமர் சந்திப்பு!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    டெல்லி: கடந்த திங்களன்று கூடிய தொழில் மற்றும் வர்த்தகத்திற்கான பிரதமரின் ஆலோசனைக்குழு, நாட்டின் பொருளாதரத்தை கழுத்தை நெறிக்கும் பிரச்சனைகளான வீழ்ந்துவரும் பொருளாதார வளர்ச்சி, ஏற்றமடைந்து வரும் நடப்புக் கணக்குப்பற்றாக்குறை, தள்ளாடும் ரூபாய் மதிப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு நெருக்கடிகள் குறிந்து விவாதித்தது.

    நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், நாட்டின் பல்வேறு துறையைச் சார்ந்த மிகப்பெரும் தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, ராகுல் பஜாஜ், இன்போசிஸ் நாராயணா மூர்த்தி, விப்ரோ அசிம் பிரேம்ஜி, சுவாதி பிரமால், ஹெச்டிப்சி தீபக் ப்ரேக், ஜம்ஷ்ய்த் N .கோத்ரேஜ் , ஐசிஐசிஐ யின் சாந்தா கோச்சர், சுனில் காந்த் முஜ்ஜால், S.கோபாலகிருஷ்ணன், டாக்டர் ராணா கபூர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    இந்தியாவின் பெரிய தலைகளுடன் பிரதமர் சந்திப்பு!!!

     

    அதிகரித்துவரும் நடப்புக் கணக்குப்பற்றாக்குறை மற்றும் குறைந்து வரும் அந்நிய முதலீடு போன்ற பொருளாதார பிரச்சனைக்களுக்கு இடையே நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஆடம்பர பொருட்களுக்கான வரியை உயர்த்துவது மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான கடன் பத்திரங்கள் போன்ற விஷயங்களை பிரதமர் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களுடன் விவாதித்துள்ளார்.

    நுகர்வோர் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கான வரியை உயர்த்துவது, கடன் பத்திரங்களின் ஊடாக தங்க இறக்குமதியை குறைக்கும் புத்தாக்க வழிமுறைகள், அந்நிய நேரடி முதலீட்டுக்கான நிபந்தனைகளை தளர்த்துவது, அந்நிய நேரடி முதலீட்டுக்கான ப்ரோமோசன் குழுவின் (FOREIGN INVESTMENT PROMOTION BOARD) செயல்பாடுகளை விரைவாக்குதல், சுமுகமான கடன் பத்திர மற்றும் பரஸ்பர நாணய பரிமாற்று நெறிமுறைகள், அரசு - தனியார் கூட்டு (PPP) முயற்சியில் கோல் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளை செம்மையாக்குதல், மருத்துவ துறையின் நெருக்கடிகளை களைவது மற்றும் ஆராய்ச்சிகளை அதிகரிப்பது, வரி பிரச்சனைகளை தீர்ப்பது உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஆராயப்பட்டன.

    "மேற்கூறிய பிரச்சனைகளின் மீதான நீண்ட விவாதங்கள் நடைபெற்றன. கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், தங்கள் கருத்துகளையும்,பிரச்சனைகளை தீர்க்க வழிமுறைகளையும் தெரிவித்தனர். 8% (GDP) பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலும் முடிவுகளை சிந்தித்து செயல்படுத்துவது, தற்போதைய தாமத நிலையில் இருந்து மீண்டு வருதலின் அவசியம்" ஆகியன விவாதிக்கப்பட்டதாக பிரதமரின் அலுவலக அதிகாரி (PMO) தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டார்.

    தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

    English summary

    PM, India Inc discuss Current Account Deficit, slowing growth

    The Prime Minister's Council on Trade & Industry met on Monday to discuss issues concerning the Indian economy including the faltering growth, rising Current Account Deficit (CAD), falling rupee and the infrastructure bottlenecks.
    Company Search
    Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
    Thousands of Goodreturn readers receive our evening newsletter.
    Have you subscribed?

    Find IFSC

    Get Latest News alerts from Tamil Goodreturns

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more