வருமான வரித்தாக்கல் செய்ய தவறிவிட்டீர்களா? இதைப்படிங்க முதல்ல!!!

வருமான வரித்தாக்கல் செய்ய தவறிவிட்டீர்களா? இதைப்படிங்க முதல்ல!!!
2012-2013 நிதி ஆண்டுக்கான வருமான வரித்தாக்கல் செய்ய தவறிவிட்டால், கவலைபடாமல் கீழே கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் படித்து பலன் பெறுங்கள்.

வரிச்செலுத்துவோருக்கு, இந்திய வருமான வரித்துறை இரண்டு வருட கால அவகாசத்தை அளிக்கிறது. அதாவது 2012-2013 நிதி ஆண்டுக்கான வருமான வரித்தாக்கல் செய்ய தவறிவிட்டால், 2015 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது.

இந்த முறையின் கீழ் தாமதமாக வருமான வரித்தாக்கல் செய்யும்போது, ஏதேனும் திருத்தம் இருக்குமெனில் திரும்பவும் பார்த்து பிழை திருத்த இயலாது. அதே போல் இழப்புகளை அடுத்த ஆண்டுக்கு முன்னெடுத்துச் செல்லவும் முடியாது.

தாமதமாக வருமான வரித்தாக்கல் செய்தால் அபராதம் மற்றும் வட்டி வசூல்

இந்திய வருமான வரித்துறை, தாமதமாக வருமான வரித்தாக்கல் செய்வோரிடமிருந்து அபராதம் மற்றும் வட்டி வசூலிக்கும். வரிகட்டாத தொகைக்கு மாதம் 1 விழுக்காடு என்ற அளவில் வட்டி விதிக்கப்படுவதுடன், வரிச்செலுத்துவோரின் தன்மைக்கு ஏற்ப அபராதமும் விதிக்கப்படும்

1.ஏற்கனவே வருமான வரி செலுத்தப்பட்டுவிட்டது

குறிப்பிட்ட ஆண்டிற்கான வரியை முன்னரே செலுத்தி இருந்தால், பின்னர் தாமதமாக வருமான வரித்தாக்கல் செய்தால் வட்டியோ, அபராதமோ கிடையாது. இருப்பினும் இறுதி கால அவகாசம் முடிந்த பின்னரும் வருமான வரித்தாக்கல் செய்யவில்லையெனில், 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

2. வருமான வரி செலுத்தப்படவில்லை

கட்டவேண்டிய வரியை அரசுக்கு செலுத்தவில்லையெனில், சிக்கல்தான். வரிகட்டாத தொகைக்கு மாதம் 1 விழுக்காடு என்ற அளவில் வட்டி விதிக்கப்படும்.

மேலும் தாமதம்?

குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு பின்னரும் வருமான வரித்தாக்கல் செய்யமுடியும். ஆனால் காத்திருக்கும் காலம் அதிகமாக இருக்கலாம், மேலும் திருத்தம் இருக்குமெனில் பிழை திருத்த இயலாது.

ஆகமொத்தம் இறுதி நாள் முடிந்த பின்னரும் வருமான வரித்தாக்கல் முடியுமென்றாலும், சரியான நேரத்திற்குள் வருமான வரித்தாக்கல் செய்வதுதான் உங்கள் பணத்தை விரைவில் திரும்ப பெற நல்ல வழி.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+