ஏ.டி.எம் மெஷின்ல பணம் இல்லைன்னா, மக்களுக்கு சொல்லுங்கப்பா!!!: ஆர்.பி.ஐ

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏ.டி.எம். (ATM) மெஷினில் பணம் இல்லையென்றால், வாடிக்கையாளர்கள் அதை பயன்படுத்த தொடங்கும் முன்னரே அதை ஒரு செய்தியாக அவர்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளதாக ஊடகங்களின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

இந்த தகவலை பற்றி ரிசர்வ் வங்கி கூறுகையில், "ஏ.டி.எம்-மில் பணம் இல்லையென்ற செய்தியை வாடிக்கையாளர் பரிமாற்ற நடவடிக்கை தொடங்கும் முன்னரே அவருக்கு தெரிவித்து விட வேண்டும்."

இத்தகவலை ஏ.டி.எம் மெஷினின் திரையிலோ அல்லது வேறு வடிவிலோ தெரிவிக்கப் பட வேண்டும்.

ஏ.டி.எம் மெஷின்ல பணம் இல்லைன்னா, மக்களுக்கு சொல்லுங்கப்பா!!!:  ஆர்.பி.ஐ

மேலும் ஏ.டி.எம் மெஷினின் அடையாள எண்ணையும் அந்த மையத்தில் குறிப்பிட வங்கிகளுக்கு வலியுறித்தியுள்ளது. இதனால் குறைகளையோ கருத்துகளையோ வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் போது அந்த மெஷினுடைய எண்ணையும் குறிப்பிடலாம்.

ஏ.டி.எம். மையங்களில் அதன் குறைகளை தெரிவிக்க படிவங்கள் வைக்கப்பட வேண்டும் என்றும் குறைகளை கையாளும் அதிகாரிகளின் பெயரும் தொலைபேசி எண்களும் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது என்று பி.டி.ஐ. (PTI) தெரிவித்துள்ளது.

"இது குறைகளை தெரியப்படுத்த ஏற்படும் தாமதத்தை குறைக்க உதவும்", என்று கூறியுள்ளது.

வாடிக்கையாளர்கள் குறைகளை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்களை (Toll-Free) அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் வங்கிகளின் இணையதளத்திலும் தெரிவிக்கவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப் பட்டிருக்கிறது என்றும் பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Banks should display non-availability of cash in ATMs before transactions: RBI

The Reserve Bank of India has asked banks to display a message to let customers know about the non-availability of cash in an ATM before they start a transaction, said media report.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X