2013-14 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டு இலாப-நட்ட கணக்கு முடிவுகளை பெரும்பான்மையான நிறுவனங்கள் அறிவித்துவிட்ட நிலையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வர்த்தக சந்தையை ஏமாற்றவில்லை. ஆனால் வங்கி மற்றும் அடிப்படை கட்டமைப்பு துறை நிறுவனங்கள் இலாபம் அடைந்தாலும் எதிர்ப்பார்த்த அளவை எட்டவில்லை.
குறிப்பிட்ட சில பெரும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை இப்போது பார்ப்போம்.
இன்போசிஸ்
காலாண்டு முடிவுகளை முதலில் வெளியிட்ட இன்போசிஸ் நிறுவனம் எதிர்பார்த்த அளவுகளை எட்டியது. டாலர் வருவாய் வழிகாட்டல் அளவுகளை தக்கவைத்தது குறிப்பிடத்தக்கதாகும். வரிக்கு பிந்தைய இலாபம் மற்றும் வருவாய் அதிகரித்ததின் விளைவாக முடிவுகளை வெளியிட்ட தினத்தன்று பங்குச்சந்தையில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 10% உயர்ந்தன.
டாடா கன்சல்டன்சி குழுமம்
இன்போசிசைப் போலவே TCSஇன் முடிவுகளும் பிரமிக்கத்தக்கவை. இந்தியாவின் மிகப்பெரும் மென்பொருள் சேவை நிறுவனமான TCS 3830.64 கோடி நிகர லாபத்தை ஈட்டியது. நிறுவனத்தின் மேலாண் நிர்வாக அதிகாரிகள் மொத்த தகவல் தொழில்நுட்ப துறை அடையும் இலாபத்தை விட TCS அதிக இலாபத்தை அடையும் என சுட்டிக்காட்டினர். மேலும் பங்குகளின் விலை 52 வார உச்சத்தை தொட்டன.
லார்சன் & டுப்ரோ
லார்சன் & டுப்ரோ நிறுவன இலாப முடிவுகள் ஏமாற்றமடைய வைத்தன. எதிர்நோக்கிய 900 கோடி இலாபத்தை எட்டாமல் 756 இலாபத்தை அடைந்தது. பங்கு விற்பனை நன்றாக இருந்தாலும் வீழ்ந்துவரும் இந்திய பொருளாதாரத்தின் காரணமாக நிறுவனத்தின் இந்திய உற்பத்தி பாதிக்கப்படுமோ என்ற அச்சம் சந்தையில் ஏற்பட்டதால் பங்குகளின் விலை கணிசமாக குறைந்தது.
ஐசிஐசிஐ
நாட்டின் மிகபெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ சந்தை எதிர்பார்ப்பை தோற்கடித்து 2,274 கோடி மொத்த இலாபத்தை ஈட்டியது. மொத்த மற்றும் நிகர செயல்படா சொத்து இருப்புகளின் அளவு சிறிது அதிகரித்தாலும், பொதுத்துறை வங்கிகளைக் காட்டிலும் மோசமான நிலையை எட்டவில்லை. பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி எடுத்து வரும் முயற்சிகளின் விளைவாக முதலீட்டாளர்கள் வங்கித்துறை பங்குகளை தொடர்ந்து விற்றுவருகின்றனர்.
பாரதி ஏர்டெல்
நாட்டின் பெரிய தொலைதொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் எதிர்பார்த்த அளவை விட சிறிது அதிகமான இலாபத்தை ஈட்டியது. நிகர இலாபம் 35.5 விழுக்காடு காலாண்டு வளர்ச்சி வீதத்தை எட்டி 658 கோடி அதிகரித்தது. நிறுவனத்தின் மேலாண் நிர்வாக அதிகாரிகள் விலையிடல் அளவு தொலைத்தொடர்புத்துறையின் அளவை எட்டி வருவதாக உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
"ஏர்டெல் இந்தியாவின் முடிவுகள் தொலை தொடர்பு மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை மேலும் ஆழமாக ஊடுருவ செய்ய ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் நிறைந்த சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை பிரதிபலிக்கின்றன" என ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் பாரதி கூறினார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஜூன் முடிவடைந்த காலாண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எதிர்பார்ப்புகளை விட அதிக அளவிளான ரூ 5,352 கோடி நிகர லாபத்தை பதிவு செய்தது. இலாப வீதம் சிறிது குறைந்தாலும், நிறுவனத்தின் தீவிரமான முதலீட்டு திட்டங்களை தொடர்ந்து பங்கு வாங்கும் வீதம் அதிகமாகவே இருந்தது.


Click it and Unblock the Notifications