ஏறு முகத்தில் ஏர் இந்தியா நிறுவனம்!!!

ஏர் இந்தியா நிறுவனம் நட்டத்தை குறைத்து இலாபத்தை அதிகரிக்க செயல்படுத்திய திட்டத்தின் (TAP) விளைவாக அக்டோபர்-டிசம்பர் 2011 காலாண்டில் ரூ 512 கோடியாக இருந்த அதன் நட்டம் படிப்படியாக குறைந்து, ஜனவரி - மார்ச் 2012 காலாண்டில் ரூ 432 கோடியாகவும், ஏப்ரல் - ஜூன் 2012 காலாண்டில் வெறும் ரூ 37 கோடியாகவும் குறைந்தது.
கடந்த ஆண்டு ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இருந்து ஏர் இந்தியா, நட்டத்தில் இருந்து உபரி பணத்தை சம்பாதிக்க ஆரம்பித்தது. அக்டோபர் - டிசம்பர் காலாண்டின் போது ரூ 312 கோடியாகவும், ஜனவரி - மார்ச் மாதம் ரூ 361 கோடியாகவும் அதிகரித்த உபரி பணம், இந்த காலாண்டில் ரூ 460 கோடியாக அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications