வருங்கால வைப்பு நிதி செலுத்த தவறும் நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருங்கால வைப்பு நிதி செலுத்த தவறும் நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை!!
சென்னை: வருங்கால வைப்பு நிதி செலுத்த தவறும் நிறுவனங்களை பொருளாதார குற்ற நடவடிக்கையின் கீழ் வர வேண்டும் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் (EPFO) உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

வருங்கால வைப்பு நிதி தவணைத்தொகை செலுத்தாமை என்பது மிக கடுமையான பொருளாதார குற்றங்களில் ஒன்றாகும். இக்குற்றங்களை பொருளாதார குற்றங்களின் கீழே கொண்டுவர பொருளாதார குற்றப் பிரிவுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சம்மேளனம் நடத்திய மாநாட்டில் பேசிய மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் கே.கே. ஜலன் கூறினார்.

மேலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் 90 விழுக்காடு விண்ணப்பங்களை, தற்போதைய 30 நாள் கால வரம்பை குறைத்து 15 நாட்களுக்குள் பரிசீலிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த இலக்கை 2013 நவம்பர் 30 ஆம் தேதிக்குள் எட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

"இப்போதைக்கு வரும் 1.2 கோடி விண்ணப்பங்களில், 80 விழுக்காட்டிற்கு மேற்பட்டவை முப்பது நாட்களுக்கு தீர்க்கப்படுகின்றன , இந்த ஆண்டில் 30 நாள் கால இடைவெளியை 15 நாட்களாக குறைக்கப்படும். " என அவர் தெரிவித்தார்.

மேலும் சில உறுப்பினர்கள் இப்போது உள்ள ஒரு தீர்ப்பாயம் போதவில்லை என முறையிடுவதால், EPFO வருங்கால வைப்பு நிதி சட்டத்தில் மாறுதல் கொண்டு வந்து, ஒன்றுக்கும் மேற்பட்ட தீர்ப்பாயங்களை அமைக்க கோரியுள்ளது, அதைபோன்றே வழக்குகளை விரைந்து முடிக்க ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என்று அவர் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

EPFO wants default on PF remittance under economic offences

Retirement fund body EPFO wants defaults on PF remittance by companies to come under economic offences, a top official said on Thursday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?