
ஜூன் மாதத்தில் 50.3 ஆக இருந்த இன்டெஃஸ் 50.1 ஆக குறைந்திருப்பது, இந்திய உற்பத்தி இயக்க நிலைமையில் ஒரு பரந்த தேக்கநிலையை சுட்டி காட்டுகிறது. மேலும் இந்த இன்டெஃஸ் 50ற்கு கீழே சென்றால், வருகின்ற மாதங்களில் இன்னும் அதிகமான அளவு உற்பத்தி வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
"தொடர்ந்து மூன்றாவது மாதமாக, ஜூலையில் அவுட்புட் சரிவடைந்திருப்பது, புதிய ஆடர்களில் வீழ்ச்சி, கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் மூலப்பொருள் பற்றாகுறை போன்றவற்றிற்கு சான்றாகும். ஜூன் மாததிலிருந்து, இந்த சரிவு விகிதத்தில் மிகப் பெரியளவு மாற்றம் எதுவும் தென்படவில்லையெனினும், டிமாண்டில் ஏற்பட்ட மந்தமான நிலை காரணமாக, வரவேண்டிய புதிய வேலைகள் நலிவடைந்து, இடைநிலை மற்றும் முதலீட்டு பொருட்கள் போன்ற துறைகளில் வீழ்ச்சி ஏற்பட்டது. மாறாக நுகர்வு பொருள் உற்பத்தியாளர்களுக்கு அதிக அளவு புதிய ஆடர்கள் கிடைத்தபோதிலும், விரிவாக்க விகிததத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை" என ஹெச்.எஸ்.பி.ஐ கொள்முதல் மேலளர் குறியீடு (PMI) குறிப்பிடுகிறது.
இந்திய மற்றும் ஆசிய முதன்மை பொருளாதார நிபுணர் லேய்ஃப் எஸ்கேசென், இந்தியாவின் உற்பத்திதுறை இண்டெஃஸ் கணக்கெடுப்பு பற்றி ஹெச்.எஸ்.பி.சி யில் பின்வருமாறு கூறினார்.
" ஜூலையில் இந்திய உற்பத்தி துறை செயற்பாடு சமநிலையிலே இருந்தது, மேலும் அவுட்புடில் குறைந்தளவே வீழ்ச்சியடைந்தது. அதிகளவில் ஏற்றுமதி ஆடர்கள் கிடைக்காத காரணத்தால் ஏற்றுமதி பலவீனமானது. சரக்குகள் தேங்கியதால் வேலைவாய்ப்பும் குறைந்தது . இன்புட் மற்றும் அவுட்புட் விலைகளில் பணவீக்கத்தின் தாக்கம் அதிகளவில் இருந்தது, இது மட்டுமல்லாமல் நாணய மதிப்பு வீழ்ச்சி காரணமாக இறக்குமதி மீதான பணவீக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆர்.பி.ஐ முறையான கொள்கை விகிதங்களை சிறிது காலம் தன்பிடியில் வைத்துக்கொண்டால் பணவீக்கம் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கரன்சி ஸ்டப்லைசேஸன் மெஸெஸ் போன்ற பிரச்சனைகள் தலைதூக்க சாத்தியமில்லை" என்று கூறினார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications