ஐடி துறையில் வேலை வாய்ப்புகள் குறைகின்றது: நாஸ்காம்

ஐடி துறையில் வேலை வாய்ப்புகள் குறைகின்றது: நாஸ்காம்
டெல்லி: தகவல் தொழில்நுட்ப துறையில் நடப்பு நிதி ஆண்டில் 17 சதவீதம் வரை வேலைவாய்ப்பு குறைந்து 1,50,000 பணியாளர்கள் மட்டுமே பணியமர்த்தப்படலாம் என தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் (நாஸ்காம்) தெரிவித்துள்ளது.

(Gold Rates in Major Cities of India)

108 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டும் இந்திய தகவல் தொழில்நுட்ப துறை 30 லட்சம் பேருக்கு வேலை வழங்குகிறது.

பணியமர்த்தல் சூழல் பற்றி கேட்ட போது "இந்த ஆண்டு 1,50,000-1,80,000 பேர் பணியமர்த்தப்படலாம் என்று நான் நினைக்கிறேன். கடந்த ஆண்டு 1,80,000 பேர் தேர்ந்துடுக்கப்பட்டனர்." என தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்க (நாஸ்காம்) தலைவர் சோம் மிட்டல் தெரிவித்தார்.

கடைமட்ட வேலைகள் தானியங்கி மயமாக்கபடுவதால், கடந்த ஆண்டை விட இந்த வருடம் வேலை வாய்ப்புகள் குறைவாகவே இருகின்றன. இப்பொழுது சூழ்நிலை மாறிவருகிறது, துறைசார் வல்லுனர்களே இப்போதைய தேவை என பணியமர்த்தலின் சரிவை விளக்கி, அவர் கூறினார்.

மாறிவரும் பணியமர்த்தல் சூழல் காரணமாக வளாக பணியமர்த்தல் (Campus hiring) குறிப்பிடத்தக்க அளவில் குறையும். கடந்த வருடம் கல்லூரிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அளவில் 60 விழுக்காடு நபர்களே இந்த வருடம் பணியமர்த்தப்படலாம். இப்போது நிறுவனங்கள் தொழில்நுட்ப திறன்களை விட ஆளுமைத் திறன் மற்றும் தலைமை பண்புகளை கொண்டவர்களையே தேர்ந்தெடுக்க விரும்புகின்றன என்று சோம் மிட்டல் கூறினார்.

"ஆய்வின்படி, மூன்று ஆண்டுகளுக்கு முன் நிறுவனங்களின் 80 சதவீத கவனம் தொழில்நுட்ப திறன்களை நோக்கி இருந்தது ஆனால் இப்போது மட்டும் 40 சதவீதம் கவனம் மட்டுமே தொழில்நுட்ப திறன்கள் மீது உள்ளது. மீதி 60 விழுக்காடு கவனம் ஆளுமைத் திறன்,துறைசார் மற்றும் தலைமை பண்புகள் மீதே உள்ளது" என மிட்டல் தெரிவித்தார்.

இந்தியாவின் நான்கு பெரிய ஐடி நிறுவனங்கள், இந்த ஆண்டு ஏப்ரல், ஜூன் காலாண்டில் 60 சதவீதம் வரை பணியமர்த்தலைக் குறைத்துவிட்டன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 10,900 தொழிலாளர்களைத் தேர்ந்தெடுத்த இந்தியாவின் நான்கு பெரிய ஐடி நிறுவனங்கள் இந்த காலாண்டில் 4,100 தொழிலாளர்களைத் மட்டுமே சேர்த்துள்ளன.

https://www.goodreturns.in/news/2013/08/05/it-hiring-could-come-down-17pc-this-fiscal-nasscom-195528.html

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+