டிரில்லியன் டாலர் அளவுக்கு சரிந்தது இந்திய பங்குச்சந்தை!!!

மும்பை: ரூபாய் மற்றும் பங்கு விலைகளின் மதிப்பு குறைந்து வருவதால், இந்திய பங்கு சந்தையின் அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த மதிப்பு டிரில்லியன் டாலர் அளவிற்கு சரிந்தது.

காலை வர்த்தகம் தொடங்கிய உடன் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 61.51 என்னும் குறைந்த அளவைத் தொட்டது. மேலும் பங்கு சந்தையின் மதிப்பும் ஒரு சதவீததிற்கும் மேலான வீழ்ச்சியைச் சந்தித்தது. இதன் விளைவாக, நாட்டின் அனைத்து பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு $ 992 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ 60.9 லட்சம் கோடி) குறைந்தது.

பங்கு மற்றும் ரூபாய் மதிப்பு தொடர்ந்து பலவீனம் அடையும் வேளையிலும் கடந்த சில நாட்களாக இந்திய பங்கு சந்தையின் மொத்த மதிப்பு டிரில்லியன் டாலர் அளவிற்கு கீழே விழாமல் மயரிழையில் தப்பிவந்தது.

டிரில்லியன் டாலர் அளவுக்கு சரிந்தது இந்திய பங்குச்சந்தை!!!

நேற்றைய வர்த்தக முடிவில், இந்திய பங்குகளின் மொத்த மதிப்பு ரூ 61,55,448.63 கோடியாக ($ 1.011 டிரில்லியன்) இருந்தது. இது கடந்த வாரம் $ 1. 004 டிரில்லியன் அளவிற்கு குறைந்தது.

டிரில்லியன் டாலர் மதிப்பில் இருந்து இந்தியா வெளியேறிய பின்னர், உலகம் முழுவதிலும் 13 பங்கு சந்தைகள் தான் டிரில்லியன் டாலர் மதிப்புடன் உள்ளது. இதில் 20 டிரில்லியன் டாலர் மதிப்புடன் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து, ஜப்பான், சீனா, கனடா, ஹாங்காங், ஜேர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, தென் கொரியா, நோர்டிக் பிராந்தியம் மற்றும் பிரேசில் ஆகிய 12 நாட்டு பங்கு சந்தையின் மதிப்பு டிரில்லியன் டாலர் அளவிற்கு அதிகமாக உள்ளது

ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகளின் சந்தை மதிப்பு டிரில்லியன் டாலர் நிலையில் இருந்து சில மாதங்களுக்கு முன் சரிந்தது. குறைந்தபட்சம் மூன்று சந்தைகள் - பிரேசில், தென் கொரியா மற்றும் நோர்டிக் பகுதிச் சந்தைகள் மயரிழையில் தப்பிவருகின்றன.

2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியச் சந்தை முதன் முறையாக டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டியது. உலகப் பொருளாதாரச் சுணக்கதிற்கு பின்னர் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டிரில்லியன் டாலர் மதிப்பை இழந்தது. மீண்டும் மே 2009 இல் டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டியது. பெரும்பாலும் சில குறைவான காலகட்டங்களைத் தவிர்த்து, டிரில்லியன் டாலர் மதிப்பில் தொடர்ந்து இருந்துவந்தது..

சமீபத்திய மாதங்களில் ரூபாயின் பலவீனம் தான் சந்தையின் மொத்த மதிப்பு சரிய காரணமான பெரிய சக்தியாக உள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் 2013 ஆரம்பத்தில் இருந்து இந்திய பங்கு சந்தையின் ரூபாய் மதிப்பு 4 (ரூ 63.88 லட்சம் கோடியில் இருந்து 60.90 கோடிக்கு) சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், இந்திய பங்கு சந்தையின் டாலர் மதிப்பு 18 சதவீதம் (1,209 பில்லியன் டாலரில் இருந்து 992 பில்லியன் டாலருக்கு) வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த காலத்தில் ரூபாயின் மதிப்பு 12 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+