ரகுராம் ராஜன் எதிர்கொள்ளபோகும் சவால்கள்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பை ஏற்க உள்ள ரகுராம் ராஜன் கண்முன்னே அதல பாதளத்துக்கு சென்று விட்ட ரூபாய் மதிப்பு, பொருளாதார வளர்ச்சியின் வீழ்ச்சி மற்றும் பணவீக்க உயர்வு உள்பட பல்வேறு சவால்கள் உள்ளன.

இந்த பிரச்சனைகளை இந்திய ரிசர்வ் வங்கி ஒற்றை ஆளாக தீர்க்கமுடியாது. பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசாங்கத்திற்கு ரிசர்வ் வங்கி தன்னால் இயன்ற ஆதரவை மட்டுமே வழங்க இயலும். இப்போது புதிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் எதிர்கொள்ளவேண்டிய ஐந்து முக்கியமான சவால்களைப் பார்ப்போம்.

வளர்ச்சி Vs பணவீக்கம்

வளர்ச்சி Vs பணவீக்கம்

ரகுராம் ராஜன் பொருளாதார வளர்ச்சியையும் பணவீக்கதையும் எவ்வாறு ஒருசேர கையாளப் போகிறார் என்பதை முடிவு செய்ய வேண்டும். நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் (CPI Inflation) இரட்டை இலக்கத்தை தொடும் நிலையில் உள்ளது. மொத்த விலை குறியீட்டு பணவீக்கம் (WPI Inflation) நான்கு ஆண்டு வீழ்ச்சியில் உள்ளது. ரெப்போ வீதத்தை (repo rates) குறைப்பது வளர்ச்சிக்கு உதவும், ஆனால் பணவீக்கத்தை அதிகரித்துவிடும். மிகவும் தர்மசங்கடமான நிலை ரகுராம் ராஜன் கண்முன்னே உள்ளது.

அந்நிய செலாவணிச் சந்தையின் விஸ்வரூபம்!!

அந்நிய செலாவணிச் சந்தையின் விஸ்வரூபம்!!

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துக்கொண்டிருக்கும் இச்சூழலில் சந்தையில் பதற்றத்தைத் தணித்து அமைதியை நிலைநாட்டுவது முக்கிய சவாலாகும். ரூபாயின் மதிப்பை அதிகரிப்பதைவிட, சந்தையில் நிலவும் பதற்றத்தைக் குறைத்து அந்நிய முதலீட்டார்களின் பயத்தை நீக்குவது மிக முக்கியமான பணியாகும்.

புதிய வங்கியின் உரிமங்கள்

புதிய வங்கியின் உரிமங்கள்

ரகுராம் ராஜன் புதிய வங்கி உரிமம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளையும் மேற்பார்வையிட வேண்டும். எனினும் எளிதான பணி போல தோன்றினாலும், இந்த நிச்சயமாக ஒரு எளிதான பணி அல்ல.

முதலீட்டை ஊக்கப்படுத்த வேண்டும்

முதலீட்டை ஊக்கப்படுத்த வேண்டும்

ராஜன் ரூபாயின் வீழ்ச்சியைத் தடுக்க டாலர் முதலீட்டை ஊக்குவிக்கும் செயல்களையும் செய்யவேண்டும். கடந்த சில மாதங்களில் , பில்லியன் கணக்கான டாலர்கள் இந்திய பங்கு மற்றும் கடன் சந்தைகளில் இருந்து வெளியேறிவிட்டது.

பொருளாதார வளர்ச்சியின் வீழ்ச்சி

பொருளாதார வளர்ச்சியின் வீழ்ச்சி

கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துவிட்டது. பணவியல் கொள்கைகளின் ஊடாக ரகுராம் ராஜன் வளர்ச்சியை அதிகரிக்க உதவினாலும், பெரும்பான்மையான பொறுப்பு அரசாங்கத்தின் கைகளில் உள்ளது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 challenges ahead of next RBI Governor Raghuram Rajan

Raghuram Rajan is all set to take charge as RBI Governor at a time when the rupee is teetering, economic growth has slumped and CPI inflation continues to be at elevated levels.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X