ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மீது 792 மில்லியன் டாலர் அபராதம்!!!: எண்ணெய் ரெகுலேட்டரான DGH

டெல்லி: கிழக்கு கழிமுகப்பகுதியின் கேஜி-டி6 பகுதிகளில் இருந்து உத்தேச உற்பத்தியைவிட குறைவானஇயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்ததற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மீது 792 மில்லியன் அமெரிக்க டாலர் கூடுதல் அபராதம் விதிக்க எண்ணெய் ரெகுலேட்டரான DGH பரிந்துரை செய்துள்ளது.

ஹைட்ரோகார்பன்ஸ் பொது இயக்குநரகம் (DGH) உற்பத்தி செலவாக 792 மில்லியன் அமெரிக்க டாலரை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தரக்கூடாது என பெட்ரோலியத்துறை அமைச்சகத்திற்கு கடந்த மாதம் பரிந்துரை செய்திருந்தது.

தவரவிட்ட உற்பத்தி இலக்கு

தவரவிட்ட உற்பத்தி இலக்கு

ரிலையன்ஸ் நிறுவனம் 2012-13 ஆண்டு காலகட்டத்தின் போது சராசரி உற்பத்தி இலக்கான 86.73 மில்லியன் கன மீட்டர் எரிவாயுவை உற்பத்தி செய்யும் இடத்தில் மாறாக ஒரு நாளுக்கு சராசரியாக 26.07 மில்லியன் கன மீட்டர் எரிவாயுவை மட்டுமே உற்பத்தி செய்தது

2010-11 மற்றும் 2011-12 ஆண்டு காலகட்டத்தின் போது உற்பத்தி இலக்கை தவறவிட்டமைக்காக 1.005 பில்லியன் அமெரிக்க டாலர் உற்பத்தி செலவு தரப்படவில்லை என உயர் அதிகாரி தெரிவித்தார்.

 

 

1.797 பில்லியன் டாலர்

1.797 பில்லியன் டாலர்

"ஜூலை 22ல் எழுதிய கடிதத்தில் ஹைட்ரோகார்பன்ஸ் பொது இயக்குநரகம் (DGH), 2012-13 ஆண்டு வரை 1.797 பில்லியன் (792 மில்லியன் மற்றும் 1.005 பில்லியன் அமெரிக்க டாலர்) ஒட்டுமொத்த மீட்பு செலவு தரக்கூடாது என முன்மொழிந்திருந்தது" என்று அவர் கூறினார்.

உற்பத்தி குறையக் காரணம்

உற்பத்தி குறையக் காரணம்

ரிலையன்ஸ் நிறுவனம் ஒதுக்கப்பட்ட கிணறுகளில் இருந்து இயற்கை வாயுவை தோண்டி எடுக்காததே உற்பத்திக் குறைவின் காரணம் என ஹைட்ரோகார்பன்ஸ் பொது இயக்குநரகம் குற்றம் சாட்டியது. ரிலையன்ஸ் நிறுவனம் 80 மில்லியன் கன மீட்டர் உற்பத்தியை எட்டும் அளவிற்கு உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளது. ஆனால் தற்போது 14 மில்லியன் கன மீட்டர் எரிவாயுவை விடவும் குறைவாகவே உற்பத்தி செய்கிறது.

அரசின் கடுமையான முடிவு!!

அரசின் கடுமையான முடிவு!!

உற்பத்தி பகிர்வு ஒப்பந்தத்தின் படி , ரிலையன்ஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் பிரிட்டிஷ் பெட்ரோலியம், நிக்கோ ரிசோர்சஸ் ஆகியன விற்பனை வருவாயில் இருந்து மூலதனம் மற்றும் செயல்பாட்டு செலவுகளை கழித்துவிட்டு இலாபத்தை அரசுடன் பங்கிட்டு கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன. அதிகமான அல்லது பயன்படுத்தப்படாத உள்கட்டமைப்பு வசதிகள் அரசுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறு ஏற்படும் நட்டத்தை, உற்பத்தி செலவை தராமல் இருப்பதின் மூலம் அரசு ஈடு செய்ய முயன்று வருகிறது.

முந்தைய பரிந்துரை, விசாரணையின் கீழ் உள்ளதால் ஹைட்ரோகார்பன்ஸ் பொது இயக்குநரகத்தின் பரிந்துரை மீது பெட்ரோலியத்துறை அமைச்சகம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிகாரி தெரிவித்தார்.

 

 

5.768 பில்லியன் டாலர் முதலீடு

5.768 பில்லியன் டாலர் முதலீடு

ரிலையன்ஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் இதுவரை 5.768 பில்லியன் அமெரிக்க டாலரை கேஜி- டி 6 தொகுதியில் திருபாய்-1 மற்றும் (டி1 & டி3) பகுதியை தயார்படுத்துவதற்காக முதலீடு செய்துள்ளனர் . மேலும் அதே பகுதியில் (MA) 1.74 பில்லியன் அமெரிக்க டாலரை செலவு செய்துள்ளனர்.

2010-11 ஆண்டு வரை 457 மில்லியன் அமெரிக்க டாலரும், 2011-12 ஆண்டு வரை 1.005 பில்லியன் அமெரிக்க டாலரும் அமைச்சகம் 2012 ஆம் ஆண்டு மே மாதம் அபராதம் விதித்தது.

 

 

உற்பத்தி நிலை

உற்பத்தி நிலை

நடப்பு ஆண்டில் KG-DWN-98/3 (கே.ஜி.-டி6) தொகுதியில் இருந்து சராசரியாக 86.92 மில்லியன் கன மீட்டர் எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆகஸ்ட் 2010 ல் 62 மில்லியன் கன மீட்டர் உச்சத்தை தொட்டபின்னர் தற்போது உற்பத்தி குறைந்து வருகிறது.

 

 

ரிலையன்ஸ் நிறுவனத்தின் விளக்கம்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் விளக்கம்

D1 & D3 பகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட கிணறுகளும் மற்றும் MA பகுதியில் மூன்றில் ஒரு பங்கு கிணறுகளும் நீர் ஏற்றும் / மணல் உட்செலல் காரணமாக மூடப்பட்டதால் குறைந்துவிட்டது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் D1 & D3 பகுதிகளில் ஒதுக்கப்பட்ட 31 கிணறுகளில் இருந்து இயற்கை வாயுவை தோண்டி எடுக்கவில்லையெனவும் உற்பத்திக் குறைவின் காரணம் என ஹைட்ரோகார்பன்ஸ் பொது இயக்குநரகம் குற்றம் சாட்டியது.

ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் முன்னர் கணிக்கப்பட்ட அழுத்தக் குறைவு மற்றும் ஆரம்பத்தில் கிணறுகளில் ஏற்பட்ட தண்ணீர் உற்பத்தியை விட எரிவாயுக் கிணறுகளின் தன்மைகளில் நிலவும் மாற்றங்களே உற்பத்திக் குறைவுக்குக் காரணம் எனக் கூறுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+