
"இந்தக் குழு வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் தற்போதைய ஆணையின் நிலையை ஆய்வு செய்யும். தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் சூழல் காரணமாக வேகமாக மாறிவரும் புறச் சூழலை எதிர்கொள்ளும் ஒரு நடவடிக்கையாக இந்த ஆய்வு அமையும். வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் ஆணைகளை மாற்றம் செய்யவேண்டிய தேவை உள்ளது" என செவ்வாய்க்கிழமை மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுதிய பதிலில் வேளாண்மை மற்றும் உணவு பதனிடுதல் துறை இணை மந்திரியுமான தாரிக் அன்வர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழு தற்போது உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்யும் விலைக்கொள்கை, போக்குவரத்து, சந்தைப்படுத்தல், பதனிடுதல் மற்றும் சேமிப்பு உட்பட பல்வேறு காரணிகளை ஆய்வு செய்யும்.
"இந்த ஆய்வுக் குழு நடைமுறையில் உள்ள கட்டணம், வரி, கடன், சந்தை போன்றவற்றின் நிலையும் ஆய்வு செய்யும். மேலும் தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் சூழலில் விவசாயிகளுக்கு போட்டிகளை சமாளிக்கவும் மற்றும் இலாபத்தை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை பரிந்துரைக்கும். மேலும் பரந்துபட்ட விவசாய வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளையும் பரிந்துரைக்கும்" என அமைச்சர் கூறினார்.


Click it and Unblock the Notifications