இந்திய சேவைத்துறை கடும் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜூன் மாதம் 51.7 ஆக இருந்த ஹெச்.எஸ்.பி.சி சர்விஸ் இன்டெக்ஸ் ஜூலையில் 47.9 ஆக குறைந்த காரணத்தால், இந்திய சேவை துறை PMIயில் ஒரு தீவிர சுருக்கம் ஏற்பட்டது. கடந்த அக்டோபர் 2011 முதல் நடுத்தர நிலையில் இருந்து வந்த ஹெச்.எஸ்.பி.சி சேவை வணிக செயற்பாட்டு இன்டெக்ஸ், முதன்முறையாக 50.0ஐ விட குறைவாக பதிவுசெய்யப்பட்டது. துணைச்சேவை துறைகளான போக்குவரத்து மற்றும் சேமிப்பு, வாடகை மற்றும் வணிக செயற்பாடுகள் ஆகியவையே இந்த ஒட்டுமொத்த சரிவிற்கு முக்கிய இயக்கிகள் என சேவைத் துறை தரவு சுட்டிகாட்டுகிறது.

"கடந்த நான்கு ஆண்டு காலத்தில், இந்திய தனியார் துறை வணிக செயற்பாடுகள் அனைத்துமே சரிவடைத்திருப்பது இதுவே முதன்முறை என ஜூலை தரவு குறிப்பிடுகிறது. உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் அவுட்புட் மிககுறைவாக பதிவாகியிருப்பது, புதிய வணிக வீழ்ச்சி மற்றும் பொருளாதார சிக்கல் போன்றவற்றிற்கு சான்றாகும். ஜூன் மாதம் 50.9 ஆக இருந்த ஹெச்.எஸ்.பி.சி இந்திய காம்போசிட் அவுட்புட் இன்டெக்ஸ் ஜூலையில் 48.4 ஆக குறைந்திருப்பது, மிக பெரிய சுருக்க நிலையை சுட்டிகாட்டுகிறது" என ஹெச்.எஸ்.பி.சி PMI குறிப்பிட்டுள்ளது.

இந்திய சேவைத்துறை கடும் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது!!!

ஜூலையில், இந்திய தனியார் துறை நிறுவனங்களுக்கு கிடைத்த புதிய ஆடர்கள் வீழ்ச்சி கண்டிருப்பது, பலவீனமான பொருளாதார நிலையை குறிக்கிறது. ஏப்ரல் 2009லிருந்து மிதமான அளவு பாதிப்பு இருந்து வந்தபோதிலும், சமீபத்திய இன்டெக்ஸ் வீழ்ச்சி அதிகளவில் பதிவாகியுள்ளது. சேவைதுறையின் அதிவேக சுருக்க-விகிதத்தினால், உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களுக்கு கிடைத்த புதிய வேலைகளின் அளவு மிகக்குறைவாக இருந்தது.

"இருப்பினும், ஜூலையில் இந்தியவில் தனியார் துறை முழுவதும் வேலைத் தேக்க நிலை அதிகரித்து காணப்பட்டது. மின்வெட்டு மற்றும் மூலப்பொருள் பற்றாகுறையின் விளைவாக, உற்பத்தி நிறுவனங்களின் வேலைகள் தடைப்பட்டதால், பாதியில் விடப்பட்ட வேலைகளின் அளவு அதிகமானது. அதேவேளை, வாடிகையாளர்களிடமிருந்து பேய்மென்ட்டுகள் தாமதமாக கிடைத்தது என சர்விஸ் ப்ரோவைடர்ஸ் கருத்து தெரிவித்தனர்" இவ்வாறு ஹெச்.எஸ்.பி.சி PMI குறிப்பிட்டுள்ளது.

இந்திய மற்றும் ஆசிய முதன்மை பொருளாதார நிபுணர் லேய்ஃப் எஸ்கேசென், இந்திய சேவை துறை இண்டெஃஸ் கணக்கெடுப்பு பற்றி ஹெச்.எஸ்.பி.சி யில் பேசுகையில் "ஜூலையில் சேவைத்துறை செயற்பாட்டில் ஏற்பட்ட நலிவு, புதிய வியாபார வீழ்ச்சிக்கு வழிவகுத்தது மட்டுமன்றி, சேவை நிறுவனங்கள் மத்தியிலும் அதிர்ப்தியை கொண்டுவந்தது. அதேவேளை, கடுமையான போட்டி மற்றும் டிமாண்டில் ஏற்பட்ட பலவீனம், பணவீக்க அளவில் சிறிது தணிவை ஏற்படுத்தியது. இந்த சந்தர்ப்பத்தில், ஆர்.பி.ஐ நாணய புழக்கத்தை அதிகபடுத்த வேண்டியுள்ளது, இது பொருளாதார வளர்ச்சியை சீர்படுத்துவதற்கு அவசியமாகும்." என கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: hsbc இந்தியா
English summary

India's services sector PMI falls to the lowest in 4 years

India's services sector PMI saw a sharp contraction in activity with the HSBC Services PMI down from 51.7 in June to 47.9 in July.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X