
இந்த பரிவர்த்தனை அடிப்படையில், ‘சீமென்ஸ்' என்ற பெயர் நோக்கியா சீமென்ஸ் நெட்வர்க் நிறுவனத்தின் பெயரிலிருந்தும் மற்றும் அதன் வர்த்தகக் குறியீடுகளிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கிறது. ‘நோக்கியா சொலுஷன்ஸ் அன்ட் நெட்வர்க்ஸ்' என புதிய பெயர் மற்றும் வர்த்தகக் குறியீடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை என்எஸ்என் (NSN) என்று சுருக்கமாக குறிப்பிடலாம். இனிமேல் வர்த்தக அறிக்கைகளில் இந்த பெயரே பயன்படுத்தப்படும்.
‘நோக்கியா சொலுஷன்ஸ் அன்ட் நெட்வர்க்ஸ்' முற்றிலும் நோக்கியா நிறுவனத்திற்குச் சொந்தமாகும் மேலும் இது நோக்கியா நிறுவனத்துடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயற்படும்.
என்எஸ்என் நிர்வாக மட்டத்தில், ராஜிவ் சூரி தலைமை நிர்வாக அதிகாரியாகவும், ஜெஸ்பெர் ஓவெசென் இயக்குநர் குழுவிற்கு தலைவராகவும் (Executive Chairman) தொடர்ந்து பதவி வகிப்பார்கள்.
சீமென்ஸ் மூலம் நியமிக்கப்பட்டிருந்த, நிர்வாக இயக்குநர்கள் பதவிவிலகிய காரணத்தால், புதிய உரிமையத்திற்கு ஏற்ற விதத்தில் என்எஸ்என் நிர்வாக இயக்குநர்கள் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications