"இந்திய பங்குச் சந்தை மெதுவாக நகரும் ரயில் போன்று இருக்கலாம், ஆனால் தடம் புரளும் அபாயத்தில் உள்ளது" cnbc.com ஒரு தலைப்பில் இந்திய சந்தை பற்றி விமர்சித்தது.
11 வர்த்தக அமர்வுகளில் சென்செக்ஸ் 1,638 புள்ளிகள் குறைந்துவிட்டது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன. இந்த 11 வர்த்தக அமர்வுகளில் சென்செக்ஸ் 10 மடங்கு குறைந்து விட்டது.
வங்கி பங்குகள் 52 வார விலை இறக்கத்தை அடைந்தன மற்றும் சில பொதுத்துறை வங்கி பங்குகளின் விலை ஒரு மாதம் முன்பு இந்த பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
புகலிடமாக எங்கும் செல்ல முடியாது
இப்போதைய உண்மையான பிரச்சினை என்னவெனில் பாதுகாப்பு தேடி எங்கும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது தான். முன்னர் முதலீட்டாளர்கள் ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், எச்டிஎப்சி வங்கி மற்றும் டிசிஎஸ் போன்ற பங்குகளை புகலிடமாக பயன்படுத்தினர்.
FMCG பங்குகள்
ஐடிசி பங்கு 370 ரூபாயில் இருந்து 320க்கு சரிந்தது. 52 வார விலை உச்சத்தில் இருந்த ஹிந்துஸ்தான் யுனிலீவர் 3 வாரங்களில் 720 ரூபாயில் இருந்து 600க்கு சரிந்தது. இதேபோல் மே மாதம் 720 ரூபாய் 52 வார விலை உச்சத்தை தொட்ட எச்டிஎப்சி வங்கி, 606க்கு குறைந்தது.
தகவல் தொழில்நுட்ப நிறுவன பங்குகளுக்கும் பலத்த அடி!!
சுவாரஸ்யமாக தகவல் தொழில்நுட்ப நிறுவன பங்குகள் இந்த காலத்தில் ஏற்றம் கண்டதின் விளைவாக முதலீட்டாளர்கள் இன்போசிஸ், டிசிஎஸ், எச்சிஎல் மற்றும் விப்ரோ போன்ற பங்குகளை நோக்கி சென்றனர். ஆனால் புதன்கிழமை தொழில்நுட்ப நிறுவன பங்குளின் மதிப்பீடுகள் பற்றி கவலை ஏற்பட்டதால், அப்பங்குகளின் விலையிலும் விரிசல் ஏற்படத் தொடங்கியது.
ரூபாய் மதிப்பு அதல பாதாளத்தில்
பலவீனமான பொருளாதார அடிப்படைகளில் இருந்து தான் பங்கு சந்தை பிரச்சனைகள் எழுகின்றன. ரூபாய் மதிப்பு சரிந்து அதல பாதளத்திற்கு சென்று விட்டது. மடுவில் இருக்கும் ரூபாய் மதிப்பு எப்போது மலை மீது ஏறத்தொடங்கும் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.
ஏற்கனவே டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்து. வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சியது போல் மத்திய ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகளின் விளைவாக வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்திவிட்டன.
பொருளாதார வளர்ச்சியின் நிலை- கோவிந்தா!! கோவிந்தா!!
பத்தாண்டுகளாக காணாத குறைந்த வளர்ச்சி விகிதத்தில் நிற்கும் பொருளாதார நிலையில் உயர்ந்த வட்டி விகிதங்கள் நல்ல செய்தி அல்ல.
நான்கு ஆண்டுகளில் முதன்முறையாக சேவைத்துறை சுருங்கத்தொடங்கியுள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டு பணவீக்கம்
பன்னாட்டு முதலீட்டு தர ஆய்வு நிறுவனங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை குறைத்து மதிப்பிடுவதில் ஆர்வமாக இருக்கின்றன. நுகர்வோர் விலைக் குறியிட்டு பணவீக்கம் (CPI inflation) குறையவும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக பொருளாதாரம் தொடர்பான மசோதாக்கள் இயற்றப்படுவது கடினமாக மாறி இருக்கிறது.
ஒரே ஒரு ஆறுதல்
மக்களவைப் பொது தேர்தல் நடக்க இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், பொருளாதார சீர்திருத்தங்கள் பின்னோக்கிச் செல்ல மட்டுமே வாய்ப்புள்ளது. தெளிவாக இந்திய பொருளாதாரத்திற்கு கெட்ட நேரம் போலிருக்கிறது. ஒரே ஆறுதல் நல்ல மழை காரணமாக விவசாய வளர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கைதான். எனவே, இன்றைய கவர்ச்சிகரமான மட்டங்களில் விலை சரிந்துள்ள பங்குகளை வாங்கினால், குறைந்தது ஒரு ஆண்டு அவற்றை வைத்திருக்க வேண்டும் என்பது உறுதி.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications