2010ஆம் ஆண்டிலிருந்து கடன்களுக்கான தேவை 150% அளவு உயர்ந்துள்ளது!!

கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ இந்தியா லிமிட்டெட் (சிபில்) -இன் துணைத் தலைவராகிய ஹர்ஷாலா சந்தோர்கர் கூற்றுப்படி, கடன் வாங்குவதில் காணப்படும் இந்த திடீர் வேகம் கிரெடிட்டிற்கான தேவை அதிகரித்துள்ளதையும், கடன் வழங்கும் நிறுவனங்கள் 2008 ஆம் ஆண்டில் நிலவிய மந்தநிலைக்குப் பின் தங்கள் பட்டுவாடாக்களை மீண்டும் துரிதமாக்கியுள்ளதையுமே காட்டுகின்றது.
பத்திரிக்கையாளர் கூட்டம் ஒன்றில் பேசிய சந்தோர்கர், சிபில் சுமார் 930 கிரெடிட் நிறுவனங்களை தனது அங்கத்தினர்களாகக் கொண்டு, சுமார் 290 மில்லியனுக்கு மேற்பட்ட நுகர்வோர் வியாபாரங்கள் மற்றும் 19 மில்லியன் வர்த்தகங்கள் பற்றிய தகவல்களை பராமரித்து வருவதாகக் கூறினார்.


Click it and Unblock the Notifications