
"சரிந்து கொண்டிருக்கும் ரூபாய் மதிப்பு உயர்தர உணவகங்களில் உணவு உட்கொள்ளும் ஆர்வத்தை குறைத்துள்ளது " என்ற தலைப்பின் மீதான அஸ்ஸோசாமின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டபோது, அஸ்ஸோசாமின் செக்ரெட்டரி ஜெனரலாகிய திரு டி.எஸ். ராவத், "ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலையை உயரச் செய்துள்ளதனால், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உயர்தர உணவகங்கள், தங்களின் உணவு அட்டவணை விலையை புதுப்பிக்கத் தலைப்பட்டுள்ளன. இதனால் இத்தகைய உணவகங்களில் உணவு உண்ணும் ஆர்வம் குறைந்து வருகிறது." என்று கூறியிருக்கிறார்.
பொருளாதார மந்தநிலை மற்றும் ரூபாய் மதிப்பின் சரிவு போன்ற எதிர்மறையான நிகழ்வுகள் சந்தையில் மலிந்திருக்கும் தற்போதைய நிலையில், உயர்தர உணவகத் துறை தன் வசீகரத்தை இழக்கும் சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.
அஸ்ஸோசாமின் கணக்கெடுப்புத் தகவலறிக்கையின் படி, பிரதான பெரு நகரங்களான டெல்லி-என்ஸிஆர், மும்பை, சென்னை, ஹைதராபாத், அஹமதாபாத் போன்றவற்றில் உள்ள உணவகங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 20 சதவீத சரிவை சந்தித்துள்ளதாகத் தெரிகிறது.
முக்கிய அயல்நாட்டு நாணயங்களுக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதினால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் சுமார் 30-35 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளதாகவும் அஸ்ஸோசாமின் இந்த ஆய்வறிக்கை, தகவல் அளிக்கிறது. சில உணவகங்கள் தங்களது தனிமுத்திரை கொண்ட உணவு வகைகளைத் தயாரிக்கத் தேவையான 85 சதவீதப் பொருட்களை ஜப்பான், பிரெஞ்சு-இத்தாலியன், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருவதாகவும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications