பாலிசிதாரர்களுக்கு பிரீமியம் செலுத்தும் முறையை IRDA தளர்த்துகிறது!!!

"பாலிசிதாரர்களின் எந்தவொரு நேரடி தலையீடும் இல்லாமல் ஈசிஎஸ் மூலம் பிரீமியம் சேகரிப்பதற்கு அதிகாரம் இருப்பதால், ஈசிஎஸ் சப்மிஷன் கடைசி தேதிக்கு, பதினைந்து நாட்கள் முன்னதாக, ஈசிஎஸ் மூலம் பணம் செலுத்துவதை நிறுத்தும் வசதியை, காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசிதாரர்களுக்கு வழங்க வேண்டும்" என சுற்றறிக்கை மூலம் ஐஆர்டிஏ தெரிவித்துள்ளது.
எனினும், காசோலை அல்லது நேரடியாக பணம் செலுத்தும் முறையில் கிடைக்கும் சுதந்திரம், உள்ளடக்கப்பட்ட பல காரணங்களால் ஈசிஎஸ் இல் கிடைப்பதில்லை எனவும் ஊடக அறிக்கை கூறியுள்ளது.
மேலும், ஈசிஎஸ் சம்பந்தமாக பின்பற்றபடவேண்டிய நடைமுறைகள், நேரக்கட்டுபாடு போன்ற அனைத்து தகவல்களும், ஈசிஎஸ் வசதியை பெறும் நேரத்தில் பாலிசிதாரர்களுக்கு விரிவாக எடுத்துச்சொல்லப்பட வேண்டும் என ஐஆர்டிஏ அனைத்து காப்புறுதி நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications