
உலகம் முழுவதும் உற்பத்தி வசதிகளை கொண்டுள்ள டாடா ஸ்டீல் நிறுவனம் பார்த்தோமானால், அப்பங்கின் புத்தக மதிப்பு ரூ 568 மற்றும் பங்கு விலை வெறும் ரூ 218 மட்டுமே. ஆக புத்தக மதிப்புடன் ஒப்பிடுகையில் பங்கின் சந்தை விலை வெறும் 0.38 மடங்கே ஆகும்.
அலுமினியம் மற்றும் தாமிர உற்பத்தியில் உலகின் மிகப் பெரிய நிறுவனமான ஹிண்டால்கோவின் கதையும் டாட்டா ஸ்டீல் போன்றே புத்தக மதிப்பு 164 ரூபாய் ஆனால் பங்கின் சந்தை விலை ரூ 90 மட்டுமே.
பொதுத்துறை வங்கிகளின் கதையும் அதே. பொதுத்துறை நிறுவனம் வங்கி பங்குகள் அனைத்தும் ஏட்டு மதிப்பை விட குறைவாகவே உள்ளன. அவற்றின் விலை ஆதாய விகிதம் 3,4,5 அல்லது 6 மடங்காக உள்ளன.
பொதுத்துறை வங்கிகள் சொத்து மதிப்பீடு தரம் தொடர்பாக கவலைகள் உள்ளன என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. ஆனால் பங்கு விலைகள் மிகைப்படுத்திக் காட்டுவதாக அறிகுறிகள் தெரிகின்றன. செயல்படா சொத்துக்களின் மோசமான நிலையில் தேனா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகள் ஒருபோதும் கண்டதில்லை.
நீங்கள் ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்கு நீண்டகால முதலீடு செய்வதாக இருந்தால், இந்த பங்குகளில் நம்பி முதலீடு செய்யலாம்.
எதிர்காலத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை குறைக்கும். அப்போது பொதுத்துறை வங்கி சார்ந்த பங்குகள் முதல் வரிசையில் நிற்கும் என்பது உறுதி. மேலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டு சுழற்சியில் வங்கி, உலோக மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு துறை பங்குகளின் விலை உடனடியாக நெருப்பு போல் பற்றிக்கொள்ளும். தற்போதைய நிலையில் இந்த பங்குகளை நம்பி ஆற்றில் இறங்குவது நல்ல யோசனையாகத்தான் தோன்றுகிறது.
இவ்வளவு குறைந்த விலையில் இந்த பங்குகளின் பின்னால் செல்வதற்கு கொஞ்சம் தைரியம் வேண்டும். வங்கி, உலோக மற்றும் உள்கட்டமைப்பு துறை பங்குகளுக்கு இன்னும் கொஞ்சம் மதிப்பு உள்ளன. ஆனால், இது போன்ற மோசமான பொருளாதார நிலையில், இந்த பங்குகளை வாங்க தைரியம் அதிகம் வேண்டும். எனினும் அழுத பிள்ளைதான் பால் குடிக்கும். தீட்டப்பட்ட வைரம் தான் கழுத்தில் மாலையாக மாறும். துணிந்து முடிவை எடுங்கள். வெற்றி உங்களுக்கே.


Click it and Unblock the Notifications