
"எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் மந்தமாக இருக்கும் ஜிடிபி வளர்ச்சி, கரன்ஸியின் அதீத நிலையற்ற தன்மை மற்றும் அதிகமான வட்டி விகிதங்கள் ஆகியவற்றினால் 2014 நிதியாண்டில் (மார்ச் 31, 2014 இறுதி வரை) கார்ப்பொரேட் துறை மீட்சியடையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை" என்று எஸ்&பி கூறியுள்ளது.
வங்கித் துறையின் நான்பெர்ஃபார்மிங் லோன் (என்பிஎல்) விகிதம், மார்ச் 31, 2013 -இல் இருந்த 3.4 சதவீதத்தோடு ஒப்பிடுகையில், 2014 ஆம் நிதியாண்டில் மொத்தக் கடன் தொகையில் சுமார் 3.9 சதவீதமாகவும், 2015 ஆம் நிதியாண்டில் சுமார் 4.4 சதவீதமாகவும் எழுச்சி அடைந்துள்ளதாக இந்த ரேட்டிங் ஏஜென்ஸி கூறியுள்ளது.
படிப்படியாகக் குறைந்து வரும் சொத்தின் தரம் மற்றும் வருமானம் எதிர்மறையான ரேட்டிங் செயல்பாடுகளுக்கு வழி வகுக்கும் என்று சுட்டிக் காட்டியுள்ள எஸ்&பி இந்தியாவின் அனைத்து வங்கிகளின் மீதான தனது தாழ்வான மனோபாவத்தையும், எதிர்மறையான கண்ணோட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. அரசுக்கு சொந்தமான வங்கிகள் கார்ப்பொரேட் மற்றும் சிறிய மற்றும் இடைநிலை நிறுவனக் கடன்களில் அதிகமான பங்கினைக் கொண்டிருப்பதாலும், அபாயத்தை கையாளும் திறனில் பலவீனமாக இருப்பதினாலும், அவை மிக மோசமான சரிவை சந்திக்கும் அபாயத்தில் உள்ளன என்றும் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications