
மேலும் இக்குழு அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியலையும் பரிந்துரைத்துள்ளது.
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தால் 4.8 விழுக்காட்டை தொட்டுவிட்ட நடப்பு கணக்கு பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில், நிதிநிலை குழுவின் இணைச் செயலாளர் ரஜத் பார்கவா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளும் மேற்கூறிய பரிந்துரைகளுக்குள் அடங்கும்.
அந்தக் குழு ஏற்கனவே தனது அறிக்கையை சிதம்பரத்திடம் சமர்ப்பித்தது, இதில் கிடைத்த ஆதாரங்களின்படி சில நடவடிக்கைகளை விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
"அக்குழு பணவீக்கத்தை பாதிக்காத அத்தியாவசிய அல்லாத பொருட்களின் மீது அதிக வரி சுமத்த பரிந்துரைத்துள்ளது " என செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன.
"குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் அல்லாத எண்ணெய் மற்றும் தேவை இல்லாத தங்க இறக்குமதியின் மீது அழுத்தம் கொடுக்க அரசு முனைவதாக" சிதம்பரம் கூறினார்.
இந்த நிதி ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலத்தில், கடந்த ஆண்டை ஒப்பிடும் பொது ஏற்றுமதி 1.41 சதவீதம் குறைந்து 72.45 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்தது. இதே காலத்தில் கடந்த ஆண்டு இறக்குமதி 5.99 சதவிகிதம் அதிகரித்து 122.6 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இருந்தன.
முதல் காலாண்டில் வர்த்தகப்பற்றாக்குறை 50 பில்லியன் டாலராக இருந்தது.
2012-13 போது இந்தியாவின் ஏற்றுமதி 300.3 பில்லியன் டாலராக இருந்தது. இறக்குமதி 491.9 பில்லியன் டாலராக இருந்தது. ஆக நடப்பு கணக்கு பற்றாக்குறை 191.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை, ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருக்கும் போது ஏற்படுகிறது.


Click it and Unblock the Notifications