
புதுச்சட்டத்தின் படி, நிறுவனங்கள் மூன்று ஆண்டு சராசரி இலாப சதவீதத்தில் இரண்டு சதவிதத்தை நிறுவன சமூக பொறுப்பு (CSR) நடவடிக்கைகள் மீது செலவழிக்க வேண்டும். ஆனால் இது ரூ 500 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட நிகர மதிப்புடைய நிறுவனங்களுக்கும், 1,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கும், 5 கோடிக்கு மேல் நிகர லாபம் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
நாட்டில் 13.29 லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இருந்தபோதிலும் சுமார் 9 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.
ஆக கூட்டிக்கழித்து பார்த்தால் சுமார் 1 சதவீத நிறுவனங்கள் மட்டுமே இந்த சட்டத்தின் பிடிக்குள் வரும். சட்டி நிறைய சோறு இருந்தாலும் அகப்பை நிறைய பருக்கை வரவே இல்லை என்பதே யதார்த்தம் இங்கே.


Click it and Unblock the Notifications