முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய ரெடியா இருங்க!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய ரெடியா இருங்க!!
தங்க நகை அடமானத்தின் பேரில் கடன் வழங்கி வரும் நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ் மாற்ற வல்ல கடனீட்டுப் பத்திரங்கள் மூலம் ரூ.300 கோடி நிதி திரட்ட அனுமதி கேட்டு இந்திய சந்தை கட்டுப்பாட்டு பாதுகாப்பு பரிவர்த்தனை வாரியத்திடம் (SEBI) வரைவு அறிக்கரியை தாக்கல் செய்துள்ளது.

"தக்கவைத்துக்கொள்ளக்கூடிய மாற்ற வல்ல கடனீட்டுப் பத்திரங்கள் வழங்குவதின் மூலம் 1,500 மில்லியன் வரை திரட்டவும், மேலும் 1,500 மில்லியன் வரை கூடுதலாக மாற்ற வல்ல கடனீட்டுப் பத்திரங்கள் வழங்குவதின் மூலம், மொத்தம் 3,000 மில்லியன் (300 கோடி) வரை திரட்டவுள்ளதாக" முத்தூட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

 

முத்தூட் நிறுவனத்துடன் இணையும் ஐசிஐசிஐ

 

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் இந்தப் பரிவர்த்தனைக்கான கூட்டுக் குழுவாக (lead managers) செயல்பட்டு எழுத்துறுதி வழங்கும். லிங்க் இன்டைம் இந்தியா நிறுவனம் பதிவாளராகவும் செயல்படுவார்கள் என ஊடக அறிக்கை தெரிவிக்கின்றன.

இந்தக் கடன் பத்திர வெளியீடு மூலமாக திரட்டப்படும் நிதி பழைய கடன்களை தீர்ப்பதற்கும், முதலீடுகளுக்கும், கடன் வழங்கவும், முதலீட்டுச் செலவினம், நடப்பு மூலதனம் தேவைகள் போன்ற நிதி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும்.

சந்தை கட்டுப்பாட்டு பாதுகாப்பு பரிவர்த்தனை வாரியத்திடம் (SEBI) தாக்கல் செய்த வரைவு அறிக்கையின் படி ரூ 150 கோடி வரை மாற்ற வல்ல கடனீட்டுப் பத்திரங்கள் வழங்குவதின் மூலம் ரூ 150 கோடி வரைநீட்டித்துக் கொள்ளக்கூடிய சந்தா வழங்க முடியும் என தெரிகிறது.

(நாணயப் பற்றாக்குறையை அகற்ற வங்கிகளுக்கு ஊக்கத்தொகை: ரிசர்வ் வங்கி)(நாணயப் பற்றாக்குறையை அகற்ற வங்கிகளுக்கு ஊக்கத்தொகை: ரிசர்வ் வங்கி)

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Muthoot Finance files draft prospectus with SEBI to raise Rs 300 cr via NCDs

In a bid to issue secured non-convertible debentures (NCDs) of up to Rs 300 crore, gold financing major, Muthoot Finance has filed a draft prospectus with sebi.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X