என்.பி.எஃப்.சிகள் (NBFC) மீது உள்ள நெறிமுறை மேற்பார்வையை, ஆர்பிஐலிருந்து நீக்கி அவற்றை ஒரு ஒருங்கிணைந்த நிதி ஆணைய (UFA) கட்டுபாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என கவர்னர் சுப்பாராவ் இன்று எச்சரிக்கை விடுத்தார். இதன் மூலம் ஒரு உறுதியான நிதி நிலையை ஏற்படுத்தி, பணவியல் கொள்கை தாக்கத்தை குறைக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
வங்கிகள், என்.பி.எஃப்.சிகள் மற்றும் இதர வைப்பு-நிதி நிறுவனக்களுக்கு இடையே வலுவான இணை தொடர்பு இருப்பதால், அவற்றை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதன் மூலம் பணவியல் கொள்கை செயலூக்கம் அடைந்து பணச்சந்தை சீராக செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சுப்பராவ் கூறுகையில்,
"வங்கிகளுக்கும் மற்றும் வங்கி சாராத வைப்பு-நிதி நிறுவனங்களுக்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதால், இந்த நிறுவனங்களை ஒரு ஐக்கியப்படுத்தப்பட்ட கட்டுபாட்டு அமைப்பின் கீழ் கொண்டுவருவது, சீரான நிதி நிலைமைக்கு அவசியமாகும். மேலும் வங்கிகளின் கடன் வழங்கும் திறன் மற்றும் என்பிஎஃப்சி போன்ற கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதன் மூலம் பணவியல் கொள்கை செயலூக்கம் பெறும்" எனவும் எஃப்.ஐ.சி.சி.ஐ மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் வங்கி மாநாடு ஒன்றில், ஆர்பிஐ கவர்னர் கூறினார்.
2008 நிதி நெருக்கடி
இந்த நடவடிக்கை ஒதுக்கீடு பற்றிய காரணங்களை விளக்கி கூறிய சுப்பராவ் அவர்கள், வங்கிகள் மற்றும் வங்கி சாராத வைப்பு நிதி நிறுவனங்களை ஏன் ஆர்பிஐ தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதை இவ்வாறு விளக்கினார். " 2008 இல் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று வங்கி சாராத நிதி நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்ட கடன் இடைத்தொடர்பு நடவடிக்கைகள், கட்டுப்பாட்டிற்குள் இருக்கவில்லை என்பதே" காரணம் ஆகும்.
ஒருங்கிணைப்பதில் பல பிரச்சனை
" முதலீட்டு ஒழுங்கு முறைகள், முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கான தேவைகள் மற்றும் இந்த நிறுவனங்களை ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டில் கொண்டுவருவதிலுள்ள இடர்கள் மற்றும் ஒருங்கியக்க பிரச்சனைகள் பற்றிய ஒரு திவீர கவலை எழும்பியுள்ளது" என செப்டம்பர் 4 இல் தனது ஐந்தாண்டு கால பணி நிறைவு காணும் சுப்பாராவ் அவர்கள் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், 2008 நிதி நெருகடிக்குப் பின்னர், நாடு உலகப் போக்கில் சென்று கொண்டிருக்கின்றது எனவும், பெரும்பாலான முன்னனி அரசுகள் மத்திய வங்கிகளுக்கு அதிகளவு கட்டுப்பாட்டு அதிகாரத்தை ஒப்படைத்து உள்ளன எனவும் கூறினார்.
சட்ட சீர்திருத்தம்
2008 இல் ஏற்பட்ட உலக அளவிலான கடன் நெருக்கடியைத் தொடர்ந்து, "நிதித்துறை சட்டங்களைத் சீர்திருத்தி தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் மாற்றியமைக்கும் நோக்கில் நிதித்துறை சட்ட சீர்திருத்த கமிஷன் (FSLRC) அரசால் அமைக்கப்பட்டது" என இதன் தலைவர் (chairman) ஒய்வு பெற்ற நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணன் மார்ச் 2013 அறிக்கை சமர்ப்பித்தார்.
சட்ட சீர்திருத்தத்தின் நன்மை
நிதி சந்தை ஒழுங்கு முறைகள் சட்ட அடிப்படையிலிருந்து கொள்கை அடிபடைக்கு மாற்றப்பட வேண்டும் என இந்த கமிஷன் முன்மொழிந்தது. கொள்கைகள் சட்டத்தின் புனிதத்தைக் கட்டிகாக்கும் எனவும் இதனால் காலப்போக்கில் எற்படும் தொழிநுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப சட்டம் மாற்றபடத் தேவையில்லை எனவும் உணரப்பட்டது.
ஒருங்கிணைந்த நிதி ஆணையம்
ரிசர்வ் வங்கியின் அதிகாரங்கள் ஒருங்கிணைந்த நிதி ஆணையத்திற்கு (UFA) மாற்றப்படும் எனவும், இதனடிப்படையில் ஆர்பிஐ வங்கிகளை மட்டும் ஒழுங்கு படுத்தும் எனவும் FSLRCயின் சில சர்ச்சைக்குரிய பரிந்துரைகள் தெரிவிக்கின்றன.
நிதி சம்பந்தமான ஒழுங்குமுறை பிரச்சனைகளை தீர்த்து வைக்க நிதித் துறை அபிவிருத்தி கவுன்சில் தவிர, தனி நிதித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பகம் மற்றும் ரெசலுஷன் கார்ப்பரேஷன் மற்றும் நிதி தீர்க்கும் ஏஜென்சி அமைக்கப்பட வேண்டும் எனவும் இந்தக் கமிஷனுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அரசு நிதிகளை நிர்வகிக்கும் ஆணையம்
அதே போல் அரசு நிதிகளை நிர்வகிக்க பப்லிக் டெப்ட் மேனஜ்மென்ட் ஏஜென்சி அமைக்கப்பட வேண்டும் எனவும் இந்த அறிக்கை அழைப்பு விடுத்துள்ளது.
FSLRCயின் பரிந்துரை
ஆர்பிஐ இன்னும் ஐந்திலிருந்து பத்து வருடங்கள் பணவியல் கொள்கைகள் மற்றும் பாரம்பரிய மத்திய வங்கி நடவடிக்கைகளை முகாமையிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வங்கிகள் உட்பட எல்லா நிதி சேவைகளையும் ஒருங்கிணைந்த நிதி ஆணையம் (UFA) கட்டுப்படுத்த FSLRC பரிந்துரைத்துள்ளது.


Click it and Unblock the Notifications