சென்னை:ஹை ஸ்பீடு டீசல் (ஹெச்எஸ்டி) மீதான அண்டர்-ரெக்கவரி, தடாலடியாக லிட்டருக்கு 10.22 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜூலை 2013 இன் முதல் இருவார காலகட்டத்தின் போது, இது லிட்டருக்கு 9.29 ரூபாயாக இருந்துள்ளது.
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருவதினால், எண்ணை வர்த்தக நிறுவனங்கள் டீசல் அண்டர்-ரெக்கவரிகளில் குறிப்பிடத்தக்க இழப்புகளை தாங்கிக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதிரடியாக டீசல் விலைகளில் ஒரே சமயத்தில் 3 ரூபாய் உயர்த்தப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

பிடிஎஸ் கெரோஸின் மற்றும் வீட்டு உபயோக எல்பிஜி ஆகியவற்றின் அண்டர்-ரெக்கவரிகள் மாதாந்திர அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. இப்பொருட்களைப் பொறுத்தவரையில், 2013 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்திற்கான அண்டர்-ரெக்கவரிகள் தலா ஒரு லிட்டருக்கு 33.54 ரூபாயாகவும், சிலிண்டர் ஒன்றுக்கு 412 ரூபாயாகவும் அதே அளவில் காணப்படுகின்றன.
ஓஎம்சிக்கள், 2013 ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் டீசல், பிடிஎஸ் கெரோசின் மற்றும் வீட்டு உபயோக எல்பிஜிக்களின் விற்பனை மீது தினப்படி அண்டர்-ரெக்கவரிகளின் கூட்டு செலவீனமாக சுமார் 389.00 கோடி ரூபாயைக் கொண்டிருக்கின்றன. இது 1.8.2013 -இலிருந்து 15.8.2013 வரையிலான இருவார காலகட்டத்தின் போதிருந்த 379 கோடி ரூபாய் தினப்படி அண்டர்-ரெக்கவரியைக் காட்டிலும் அதிகமானதாகும்.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications