எல்ஆர்எஸ் திட்டத்தின் ட்ரான்ஸாக்ஷன் வரையறை 75,000 டாலராக குறைப்பு!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லிபரலைஸ்ட் ரெமிட்டன்ஸ் ஸ்கீம் (LRS) திட்டத்தின் கீழ் அயல்நாடுகளுக்கு பணம் அனுப்ப விரும்பும் உள்ளுர் இந்தியர்கள், இனி அயல்நாடுகளுக்கு தாங்கள் அனுப்பும் பணம் அதிகபட்சமாக ஒரு நிதியாண்டிற்கு 75,000 டாலர் என்ற வரையறைக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம். முன்பு இந்த வரையறை சுமார் 2,00,000 டாலராக இருந்துள்ளது.

ரூபாய் மதிப்பின் சரிவை தடுக்கும் பொருட்டு, வெளிப்பாய்வுகளை குறைக்கவும், ரெசிடென்ட் இந்தியர்களால் செய்யப்படும் அந்நியச் செலாவணி வெளிப்பாய்வுகளை மட்டுப்படுத்தவும் முனைந்துள்ள ஆர்பிஐயின் நடவடிக்கைகளின் விளைவாகவே இந்த வரையறை சுருக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் அசையா சொத்துக்களை வாங்க தடை

வெளிநாடுகளில் அசையா சொத்துக்களை வாங்க தடை

தடைசெய்யப்பட்ட ட்ரான்ஸாக்ஷன்களான மார்ஜின் டிரேடிங் மற்றும் லாட்டரி போன்றவற்றிற்கு எல்ஆர்எஸ் -ஐ உபயோகிப்பது தொடர்பாக தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள் அப்படியே தொடரும் அதே வேளையில், எல்ஆர்எஸ் -ஐ உபயோகித்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தியாவுக்கு வெளியே அசையா சொத்துக்கள் வாங்குவது இனிமேற்கொண்டு அனுமதிக்கப்பட மாட்டாது.

100 சதவிதமாக குறைப்பு

100 சதவிதமாக குறைப்பு

ஓவர்சீஸ் டைரக்ட் இன்வெஸ்ட்மெண்ட்டுக்கான (ODI) வரையறையை பொறுத்த வரை, தானியங்கி முறையின் கீழ் செய்யப்படும் அனைத்து புதிய ODI ட்ரான்சாக்ஷன்களுக்கு முன்பிருந்த வரையறையான ஒரு இந்திய பார்ட்டியின் நிகர மதிப்பில் 400% என்பதிலிருந்து தற்போது அதன் நிகர மதிப்பில் 100% என்று குறைத்துள்ளது ஆர்பிஐ.

யாருக்கு எல்லாம் இந்த வரையறை

யாருக்கு எல்லாம் இந்த வரையறை

இந்த சுருக்கப்பட்ட வரையறையானது, இந்தியாவுக்கு வெளியே எனர்ஜி மற்றும் நேச்சுரல் ரிசோர்சஸ் துறைகளில் ஒன்றிணைக்கப்படாத தனி அமைப்புகளை ஆரம்பிக்கும் பொருட்டு ஓடிஐ திட்டத்தின் கீழ் பணம் செலுத்தக்கூடிய இந்திய நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

வரையறையில் பொருந்தாத நிறுவனங்கள்

வரையறையில் பொருந்தாத நிறுவனங்கள்

எனினும், நவ்ரத்னா பிஎஸ்யுக்கள், ஓஎன்ஜிசி விதேஷ் லிமிட்டெட் மற்றும் ஆயில் இந்தியா போன்றவற்றால் எண்ணை வளத்துறையைச் சார்ந்த அயல்நாட்டு ஒருங்கிணைக்கப்பட்டாத அமைப்புகள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகள் ஆகியவற்றில் செய்யப்படும் ஓடிஐக்கு, இந்த வரையறைக் குறைப்பு பொருந்தாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Remittances abroad under LRS by Resident Indians cut to $75,000

Resident Indians desiring to send money abroad under the liberalised remittance scheme (LRS) would now have to restrict their remittances to a maximum of $75,000 per financial year, as against the earlier limit of $2,00,000.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X