டெக் மஹிந்திரா ஊழியர்களுக்கு 8% ஊதிய உயர்வு!!

இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சி.பி. குருநானி கூறுகையில் "நாங்கள் தற்போது இரண்டு நிறுவனங்களுக்குமான (டெக் மகேந்திரா மற்றும் மஹிந்திரா சத்யம் இடையே) ஹெச்ஆர் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுப்பட்டு உள்ளோம், இதனால் ஊதிய உயர்வு இவ்வருடத்தின் நான்காம் காலாண்டில் தான் செயல்படுத்த உள்ளோம்" என்று தெரிவித்தார்.
முதல் காலாண்டின் முடிவில் இந்நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை 83,063ஆக இருந்தது.
நாங்கள் இந்த வருடம் சுமார் 1,300 ஹெச்1பி விசாக்களை பெற விண்ணப்பம் செய்துள்ளோம். இது கடந்த வருடத்தை விட 40 சதவீதம் அதிகமாகும்." என்று மிலின்டு குள்கர்னி, தலைமை நிதியியல் அதிகாரி தெரிவித்தார்.
இந்த ஹெச்1பி விசா குடியுரிமை அல்லாத வகையை சார்ந்தாது மேலும் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.


Click it and Unblock the Notifications